வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருப்பவர் நடிகை அனிகா விக்ரமன். மலையாளம் மற்றும் தமிழில் தற்போது நடித்து வருகிறார். தமிழில் இவர் நடித்த கே, விஷமக்காரன், எங்க பாட்டன் சொத்து போன்ற படங்கள் இவருக்கு நல்ல ரீச்சை பெற்று தந்தனர். அதுமட்டுமில்லை இன்ஸ்டாவிலும் இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் நடித்து வருகிறார். இன்ஸ்டாவில் அவ்வப்போது ஃபோட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் கடைசியாக இன்ஸ்டாவில் அனிகா 8 வாரங்களுக்கு முன்பு புகைப்படம் வெளியிட்டார். அதன் பின்பு அவரின் எந்த புகைப்படமும் இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் ஆகவில்லை. இந்நிலையில் நேற்றைய தினம் வீங்கிய முகத்துடன், கை , கால்களில் மோசமான காயங்களுடன் அனிகா வெளியிட்ட புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அனிகாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த பதிவும் உதவலாம்:கேன்சரிடம் போராடி வென்ற பெண் பிரபலங்கள்
இந்த புகைப்படங்களுடன் அனிகா முக்கியமான விஷயத்தையும் ரசிகர்களுக்கு இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். தன்னை இவ்வளவு மோசமாக தாக்கியது முன்னாள் காதலன் என்று அதிர்ச்சி புகாரையும் அளித்துள்ளார். அந்த போஸ்டில் அனிகா கூறியிருப்பதாவது, “நான் சில ஆண்டுகளாக அனூபால் என்பவரை காதலித்து வந்தேன். சென்னையில் என்னை முதன்முறையாக அடித்தான். பின்பு காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான். நானும் மன்னித்து விட்டேன். பிறகு மீண்டும் பெங்களூரில் என்னை மிகவும் மோசமாக அடித்தான். அவனால் ஏற்பட்ட காயங்கள் தான் இது. இதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாது என காவல் நிலையத்தில் அவன் மீது புகார் அளித்தேன். ஆனாலும் ஜாமீனில் வெளியே வந்து விட்டான். இப்போது நியூயார்க்கில் தலைமறைவாகி விட்டான்.
அவன் அடித்ததால் ஏற்பட்ட காயங்கள் இப்போது சரியாகி கொண்டே வருகின்றன. என்னை மனதளவிலும் உடலளவிலும் மிகவும் காயப்படுத்தினான். இந்த காதலில் இருந்து நான் வெளியே வர நினைத்தேன். இதை பற்றி அவனிடம் பேசியதற்கு இந்த முகத்தை வைத்து கொண்டு எப்படி நடிப்பாய்? என கூறி மிகவும் மோசமாக அடித்தான். என் குடும்பத்தை கொன்று விடுவேன் என்றும், மிரட்டினான். இப்போதும் அவன் மீது போலீஸ் புகார் இருக்கிறது. காயங்கள் சரியானதும் மீண்டும் நடிக்க வருவேன்|” என கூறியுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்.. பேட்டியில் பகீர் கிளப்பிய நடிகை குஷ்பு
அனிகாவின் இந்த பதிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதலாக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். முன்னாள் காதலனால் நடிகை இவ்வளவு மோசமாக தாக்கப்பட்ட விவகாரம், சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Images Credit: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation