Coolie ott release: ஓடிடியில் வெளியாகும் கூலி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு; எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம் என்று ரசிகர்கள் ஆர்வம்

Coolie ott release: ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூல் சாதனை படைத்த கூலி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
image
image

Coolie ott release: ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கூட்டணியில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பான் இந்தியன் திரைப்படமாக வெளியான கூலி, இந்த மாதம் ஓடிடியில் ரிலீஸாக இருக்கிறது.

கூலி திரைப்படம்:

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக கூலி இருந்தது. உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்துடன், தமிழ் சினிமாவின் இப்போதைய நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இணைந்ததால், இப்படத்தின் அறிவிப்பு வெளியானது முதல் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கு ஏற்ற வகையில், சன் பிக்சர்ஸ் சார்பில் கூலி திரைப்படம் தயாரிக்கப்பட்டதால், பெரிய பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என்று ரசிகர்கள் கருதினர்.

குறிப்பாக, பான் இந்தியன் வகையில் உருவாக்கப்பட்ட கூலி திரைப்படத்தில், சத்யராஜ், ஷ்ருதி ஹாசன், நாகார்ஜூனா, உபேந்திரா, ஆமீர் கான், ஷௌபின், ரச்சிதா ராம் ஆகியோர் நடித்தனர். மேலும், அனிருத் இசையில் கூலி திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனடிப்படையில், ரஜினிகாந்தின் ட்ரேட்மார்க் அம்சங்கள் கூலி திரைப்படத்தில் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

Coolie movie

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூலி திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. எனினும், கூலி திரைப்படத்தின் முதல் காட்சியில் இருந்து கலவையான விமர்சனங்கள் வெளியானது. அதிலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் தனித்துவமான அம்சங்கள், கூலி திரைப்படத்தில் சரியாக இடம்பெறவில்லை என்று விமர்சகர்கள் கூறினர். மேலும், பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளை கூலி திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை என கருத்துகள் உலா வந்தன.

கூலி ஓடிடி ரிலீஸ்:

ஆனால், ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கு கூலி திரைப்படம் விருந்தாக அமைந்தது என்று தெரிவிக்கப்பட்டது. அது மட்டுமின்றி, வசூல் ரீதியாகவும் கூலி திரைப்படம் பல்வேறு சாதனைகளை படைத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்தது. அந்த வகையில், கூலி திரைப்படத்தை ஓடிடி தளத்தில் எப்போது காணலாம் என்ற எதிர்பார்ப்பு மீண்டும் ரசிகர்கள் இடையே உருவானது.

Coolie OTT release

இந்த சூழலில் கூலி திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி முதல் காணலாம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினிகாந்தின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திரையரங்கில் கலவையான விமர்சனங்களை பெற்ற கூலி திரைப்படம், ஓடிடி தளத்தில் ரசிகர்களின் வரவேற்பை பெறுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Twitter

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP