சினிமா ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான கூலி திரைப்படம், வார் 2 திரைப்படத்தின் வசூலை விட அதிகமான பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனை பெற்றுள்ளது. இந்த தொகுப்பில் இரு திரைப்படங்களின் வசூல் நிலவரங்களை விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்க: கூலி பட நடிகர்களின் சம்பளம்: ரஜினிகாந்த் முதல் ஆமீர் கான் வரை பல கோடிகளில் ஊதியம் பெற்ற ஸ்டார் ஹீரோக்கள்
கடந்த வாரத்தில் சினிமா ரசிகர்களுக்கு நல்ல விருந்து கிடைத்தது என்றே கூறலாம். ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கூலி திரைப்படமும், ஹ்ருதிக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடிப்பில் உருவான வார் 2 திரைப்படமும் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாகின. அடுத்தடுத்த நாட்கள் விடுமுறை என்பதால் இந்த இரண்டு திரைப்படங்களும் நல்ல வசூலை வாரிக் குவிக்கும் என்று சினிமா விமர்சகர்கள் இடையே ஒரு கருத்து நிலவியது.
குறிப்பாக, ரஜினிகாந்தின் திரைப்படம் வெளியாகும் போது ரசிகர்கள் அனைவரும் கொண்டாட்ட மனநிலையில் இருப்பார்கள் என்பது தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். அதிலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், மோஸ்ட் வான்டட் கோலிவுட் இயக்குநரான லோகேஷ் கனகராஜும் இப்படத்தில் இணைந்ததால், கூலி திரைப்படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இது தவிர அனைத்து மொழி ரசிகர்களையும் கவரும் வகையில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் பிரபலமான நடிகர்கள் இப்படத்தில் நடித்தனர். அந்த வகையில், தெலுங்கில் இருந்து நாகார்ஜுனா, கன்னடத்தில் இருந்து உபேந்திரா, மலையாளத்தில் இருந்து ஷௌபின், ஹிந்தியில் இருந்து ஆமீர் கான் ஆகியோர் இப்படத்தில் நடித்தனர். மேலும், சத்யராஜ் மற்றும் ஷ்ருதி ஹாசனும் முக்கிய பாத்திரங்களில் இடம்பெற்றனர்.
மறுபுறம், பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் ஹ்ருதிக் ரோஷனுடன், டோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து முதன்முறையாக நடித்ததால் வார் 2 திரைப்படத்திற்கும் மிகுந்த எதிர்பார்ப்பு காணப்பட்டது. மேலும், இதற்கு முன்னர் வெளியான வார் திரைப்படத்தின் முதல் பாகமும் வர்த்தக ரீதியாக வரவேற்பை பெற்றது.
மேலும் படிக்க: பெண் கதாபாத்திரங்களை முன்னிலைப்படுத்திய தமிழ் திரைப்படங்கள் குறித்து விரிவான பார்வை
அதனடிப்படையில், இந்த இரு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியானதால், இதில் எந்த படம் வசூலில் முதலிடத்தை பெறும் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக, கூலி திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனில் சொல்லி அடித்து வருகிறது. கூலி திரைப்படம் வெளியாகி நான்கு நாட்கள் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில், சுமார் ரூ. 200 கோடி வசூலை நெருங்கி வருகிறது.
திரைப்படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷன் தொடர்பான தரவுகளை வழங்கும் இணையதளங்களின் படி, நான்காம் நாளில் மட்டும் கூலி திரைப்படம் ஏறத்தாழ ரூ. 34 கோடி வசூலித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் இருந்து மொத்தமாக இந்த அளவிற்கு வசூல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, கடந்த சனிக்கிழமை மட்டும் இப்படம் ரூ. 39 கோடி வசூலித்துள்ளது. அதனடிப்படையில், நான்கு நாட்களில் மொத்தமாக கூலி திரைப்படம் சுமார் ரூ. 193 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன.
வார் 2 திரைப்படமும் நல்ல வசூலை ஈட்டி இருந்தாலும், கூலி படத்தின் வசூலை அதனால் முந்த முடியவில்லை என்பதே நிதர்சனம். இப்படம் கடந்த சனிக்கிழமை சுமார் ரூ. 33 கோடியும், ஞாயிற்றுக்கிழமை ஏறத்தாழ ரூ. 31 கோடியும் வசூலித்துள்ளது. மொத்தமாக பார்க்கும் போது, கடந்த நான்கு நாட்களில் வார் 2 திரைப்படம் ரூ. 173 கோடி ஈட்டியுள்ளது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Twitter
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com