Kannappa movie OTT release: தெலுங்கில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான கண்ணப்பா திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ஓடிடி வெளியீடு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஓடிடியில் இப்படத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
மேலும் படிக்க: Coolie ott release: ரஜினிகாந்த் - லோகேஷ் கூட்டணியில் வெளியான கூலி; எந்த ஓடிடியில் எப்போது பார்க்கலாம்?
இதிகாசத்தை மையமாக கொண்டு தெலுங்கில் வெளியான கண்ணப்பா திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அப்படத்தின் நாயகன் விஷ்ணு மஞ்சு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்துக்களின் இதிகாசத்தில் வரும் கண்ணப்பா என்ற கதாபாத்திரம், சிவன் மீது கொண்ட பக்தியை விளக்கும் விதமாக தெலுங்கில் கண்ணப்பா என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த ஜூன் மாதம் 27-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இப்படம் வெளியானது.
கலவையான விமர்சனங்களை பெற்ற கண்ணப்பா:
தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் வெளியானது. குறிப்பாக, மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார், ப்ரீத்தி முகுந்தன், மோகன் பாபு, சரத்குமார் என பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தனர். எனினும், இப்படம் வெளியான போது கலவையான விமர்சனங்களையே பார்வையாளர்களிடம் இருந்து பெற்றது. இதனால் பெரும் பொருட்செலவில் வெளியான இப்படம், வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை.
Witness the epic, spirit of sacrifice & divinity 🙏#KANNAPPA releases digitally on Sept 4, 2025 only on Prime Video.
— Vishnu Manchu (@iVishnuManchu) September 1, 2025
Har Har Mahadev 🔱
Har Ghar Mahadev 🔥#KannappaOnPrime #KannappaMovie #HarHarMahadevॐ pic.twitter.com/WVrbZ2AMvn
கண்ணப்பா திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு:
பெரும்பாலான திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான 8 வாரங்களில் ஓடிடியில் வெளியிடப்படும். ஆனால், கண்ணப்பா திரைப்படம் சுமார் 10 வாரங்களுக்கு பின்னர் ஓடிடியில் வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் கண்ணப்பா திரைப்படம் வெளியாக இருக்கிறது.
அதன்படி, இப்படத்தை திரையரங்கில் காண தவறவிட்ட பார்வையாளர்கள் இதனை இனி ஓடிடியில் கண்டு மகிழலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திரையரங்கில் இப்படம் பெற்ற வரவேற்பை விட ஓடிடியில் இப்படத்திற்கு கூடுதல் வரவேற்பு கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Twitter
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation