Lokah OTT release: 'லோகா: சாப்டர் 1 சந்திரா' (Lokah: Chapter I Chandra) திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ஆம் தேதி வெளியானது. மலையாள திரையுலகில் இருந்து வெளியான இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த இப்படத்தை துல்கர் சல்மான் தயாரித்திருந்தார். டொமினிக் அருண் இயக்கிய இப்படம் சுமார் ரூ. 300 கோடி வசூலித்து சாதனை படைத்ததாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, மலையாளத்தில் வெளியான படங்களில் முதன்முறையாக ரூ. 300 கோடி என்ற மைல்கல்லை எட்டிய திரைப்படமாக லோகா அமைந்தது.
கேரளத்தின் புராண கதைகளை மையமாக கொண்டு கற்பனையாக உருவாக்கப்பட்ட லோகா திரைப்படம், சூப்பர் ஹீரோ பாணியில் இருந்தது. இதனால், இப்படம் வெளியானது முதல் மாறுபட்ட அனுபவத்தை கொடுத்ததாக ரசிகர்கள் தெரிவித்தனர். லோகா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, இப்படத்தின் அடுத்த பாகம் தொடர்பான அறிவிப்பும் அண்மையில் வெளியானது. இப்படத்தின் அடுத்த பாகத்தில் முதன்மை கதாபாத்திரமாக டொவினோ தாமஸ் நடிக்கிறார்.
மேலும் படிக்க: War 2 OTT release: வார் 2 திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு; எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?
லோகா திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க தவற விட்டவர்களும், மீண்டும் ஒரு முறை ஓடிடியில் பார்க்க ஆவலாக இருந்த ரசிகர்களும், இப்படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்று காத்திருந்தனர். முன்னதாக, லோகா திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியதால், ஓடிடி வெளியீடு தற்போது இல்லை என்று படத்தின் தயாரிப்பாளர் துல்கர் சல்மான் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து, ஓடிடி வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
The beginning of a new universe.
— JioHotstar Malayalam (@JioHotstarMal) October 14, 2025
Lokah Chapter 1: Chandra — coming soon on JioHotstar.@DQsWayfarerFilm @dulQuer @kalyanipriyan @naslen__ @NimishRavi @SanthyBee#Lokah #LokahChapter1 #Wayfarerfilms #DulquerSalmaan #DominicArun #KalyaniPriyadarshan #Naslen #SuperheroFantasy… pic.twitter.com/BMlsbEJM0q
இந்நிலையில், ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் லோகா திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோஹாட்ஸ்டார் மலையாளத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) தள பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளனர். இப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தேதி குறிப்பிடப்படவில்லை என்றாலும் தீபாவளி விடுமுறையை முன்னிட்டு இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்கில் வெளியான போது லோகா திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு, ஓடிடி வெளியீட்டின் போதும் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Twitter
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com