சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக பணியாற்றியர் மணிமேகலை. பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.2018 ஆம் ஆண்டு சன் மியூசிக்கில் பணியாற்றினார்.2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான mr and mrs.சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். அதன் பின்பு விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.
பாரதி கண்ணம்மா பாகன் ஒன்றில் சிறப்பு கதாபாத்திரத்தில் மணிமேகலை நடித்திருந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சீசன் ஒன்று முதல் சீசன் 3 வரை கோமாளியாக ரசிகர்களை மகிழ்வித்து வந்தார். குக் வித் கோமாளி சீசன் 4 -இல் இருந்து பாதிலேயே விலகினார். பின்பு மீண்டும் தொகுப்பாளினியாக எண்ட்ரி கொடுத்து ரக்ஷன் உடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
மணிமேகலை ஹுசைன் என்பவரை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் தற்போது சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வருகின்றனர். இவர்கள் யூடியூபில் பதிவிடும் வீடியோக்கள் மில்லியன் பார்வையாளர்களை பெற்று ட்ரெண்டிங்கில் வலம் வருகிறது.
இந்த பதிவும் உதவலாம் :மீண்டும் சீரியலில் நடிக்க வந்த ரம்யா கிருஷ்ணன்.. எந்த தொலைக்காட்சி சீரியல் தெரியுமா?
புது வீடு!
மணிமேகலை - ஹுசைன் தங்களின் புதிய வீட்டை கட்டி வருவதாக சமீப பேட்டிகளில் கூறியிருந்தனர். இந்த வீடு எங்களின் கனவு இல்லம் என மணிமேகலை கூறியுள்ளார். இந்த வீட்டிற்கு ‘HM farm house' என்ற பெயரையும் வைத்துள்ளார். மணிமேகலை லேட்டஸ்டாக தான் புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் வீட்டின் முன்பு அமர்ந்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ‘அன்பு வாழும் கூடு’என்று கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation