
இந்திய சமையல் அறையில் பெருங்காயத்தை அதிகளவில் சேர்த்துக் கொள்வார்கள். உணவிற்கு சுவையைக் கொடுப்பதோடு செரிமானம் சீராக இருத்தல், வயிற்று வலி உள்ளிட்ட பல உடல் நல பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது. இதன் தேவை ஒருபுறம் அதிகரிக்க அதிகரிக்க போலி பெருங்காயமும் சந்தையில் அதிகளவில் விற்பனையாகத் தொடங்கிவிட்டது. தற்போது சந்தைகளில் விற்பனையாகும் பெரும்பாலான பெருங்காயத்தில் அதிகப்படியான அரிசி மாவு அல்லது கோதுமை மாவு உள்ளிட்ட பல ரசாயானப் பொருட்கள் கலக்கப்படுகிறது. இவற்றை எளிமையான முறையில் எப்படி வீட்டிலேயே கண்டறியலாம்? என்பது குறித்த சிம்பிள் டிப்ஸ்கள் இங்கே.
நாம் பயன்படுத்தக்கூடிய பெருங்காயம் போலியானதா? என்பதைக் கண்டறிய முதலில் வீடுகளில் உள்ள கட்டி பெருங்காயத்தைத் தண்ணீரில் போடவும். சிறிது நேரத்தில் பால் நிறமாக மாறினால் அது ஒரிஜினல் பெருங்காயம். அதுவே தண்ணீரில் போட்டவுடன் கொஞ்சம் அழுக்கு நிறமாக மாறுவது மட்டுமின்றி, நீர்த்தும் போனால் நிச்சயம் கலப்பட பெருங்காயமாக இருக்கலாம்.
இதோடு மட்டுமின்றி வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை பெருங்காயத்தை சேர்க்கும் போது அது முழுவதுமாக கரைந்து விட வேண்டும். அப்படி கரைந்துவிட்டால் அது கலப்படம் இல்லாத பெருங்காயமாக இருக்கலாம். அதுவே கரையாத துகள்கள் அல்லது மிச்சத்தைக் கண்டால் அது கலப்படமான பெருங்காயமாக இருக்கும்.
மேலும் படிக்க: மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத உணவுகளின் லிஸ்ட் உங்களுக்காக
சமையலுக்குப் பயன்படுத்தவும் பெருங்காயத்தின் தூய தன்மையைச் சரிசெய்ய வேண்டும் என்றால் வெப்ப சோதனையைப் பயன்படுத்த வேண்டும். மெழுகுவர்த்தி அல்லது வெப்பத்தில் சுடும் போது தூய்மையான பெருங்காயம் உடனடியாக தீயில் காட்டியவும் எரியத் தொடங்கும். அதுவே நீங்கள் வைத்திருக்கும் பெருங்காயம் போலியானதாக இருந்தால் தீயில் எளிதில் எரியத் தொடங்காது.
மேலும் படிக்க: ஆட்டுக்கறியை மென்மையாகவும், விரைவாகவும் சமைக்க... இந்த குறிப்புகளைப் பின்பற்றுங்கள்..!
பெருங்காயத்தின் உண்மைத் தன்மையை வாசனையின் வாயிலாக கண்டறிய முடியும். ஆம் பெருங்காயத்திற்கு என தனி நறுமணம் உண்டு என்பதால் கையில் பட்டவுடன் வாசனை அதிகளவில் இருக்கும். இதுவே போலியானதாக இருந்தால் கையில் எவ்வித வாசனையும் இருக்காது. இதன் மூலம் பெருங்காயத்தில் உள்ள கலப்படத்தைக் கண்டறிய முடியும்.
பெருங்காயத்தை ஐஸ்கட்டியில் வைக்கும் போது உண்மையான பெருங்காயம் மெதுவாக கரைந்து வாசனை எழக்கூடும். அதுவே போலியான பெருங்காயம் என்றால் எவ்வித மாற்றமும் இருக்காது. வாசனையும் வர வாய்ப்பில்லை.
இதுபோன்ற பல்வேறு வழிமுறைகளில் பெருங்காயத்தில் உள்ள கலப்பட தன்மையைக் கண்டறிய முடியும். நீங்கள் எப்போது வாங்கினாலும் விலை மலிவான பெருங்காயம் வாங்குவதைத் தவிர்த்து கொஞ்சம் விலை அதிகம் உள்ள பெருங்காயத்தை வாங்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.
Image credit- pexels
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com