நாட்டு கூத்து பாடகர் பாடகர் ராகுலுக்கு ரகசியமாக நடந்த நிச்சயதார்த்தம்; வைரலாகும் புகைப்படங்கள்

ஆஸ்கார் விருது பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்குச் சொந்தக்காரரான ராகுலுக்கு எளிமையாக முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
image

RRR படத்தில் மிகவும் பிரபலமான பாட்டு தான் நாட்டு நாட்டு கூத்து. பல மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகி இருந்தாலும் இந்த பாட்டுக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதற்காகவே இந்த பாடலைப் பாடிய பாடகர் ராகுல் சிப்லிகஞ்ச்க்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. இதுவரை கலைத்துறையில் தன்னுடைய தனித்திறமை மூலம் வெற்றி வாகை சூடி வந்தவர் தன்னுடைய வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தில் கால் பதித்துள்ளார். ஆம் மிக நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை மட்டும் வைத்து ரசிகர்களுக்குத் தெரியாமல் தன்னுடைய நிச்சயதார்த்தை முடித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதிஆந்திராவில் மிக எளிமையான முறையில் ஹரிணி ரெட்டி என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவரவில்லை என்றாலும் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகிறது. சிவப்பு நிற லெஹங்காவுடன் ஹரிணி ரெட்டியுடன், வெண்மை மற்றும் சிமெண்ட கலந்த ஆடை அணிந்திருந்த புகைப்படங்கள் தற்போது வைரலானதோடு சமூக வலைத்தளத்தில் பேச்சுப்பொருளாக மாறியுள்ளது.

ரசிகர்களுக்கு எவ்வித அறிவிப்பும் தெரிவிக்கவில்லை என்றாலும், தங்களுக்குப் பிடித்த பாடகருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது தங்களுக்கு மகிழ்ச்சி தான் என்றும், எப்போது திருமண தேதி அறிவிப்பீர்கள்? என்பது போன்ற கருத்துக்களைப் பகிர்ந்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் வெளியாகி வெற்றி வாகை சூடிய படம் தான் ஆர்ஆர்ஆர். ஜூனியர் என்டிஆர், ராம் சரண் இணைந்து நடத்திய இப்படத்தை பிரபல இயக்குனர் ராஜ மௌலி இயக்கியிருந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக தெலுங்கு திரையுலகின் பிரபல பாடகர் ராகுல் சிப்லிகஞ்ச் பாடிய நாட்டு கூத்து பாடல் பலரது பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதைப் பாடலுக்கு ஆஸ்கார் விருதும் வழங்கப்பட்டது. இதோடு ஆந்திர மாநில முதல்வருக்கும் பரிசுத் தொகையை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image credit- Twitter

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP