
நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். இவரின் சிரிப்பிற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.படையப்பா படத்தில் நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் சிவகாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஆச்சரிய பட வைத்தார். இந்த கதாபாத்திரத்தை இவரை தவிர வேற யாரும் நடிக்க முடியாது என்ற பெயரையும் பெற்றார்.
ரம்யா கிருஷ்ணன் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து இருக்கிறார். படையப்பா படத்திற்கு பிறகு ஜெயிலர் படத்தில் மீண்டும் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருந்தார். ஜெயிலர் திரைப்படம் ரூ.650 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் வெகுளியான கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனது அடுத்த படம் குறித்து ரம்யா கிருஷ்ணன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் சின்னத்திரையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் மீண்டும் எண்ட்ரி கொடுக்க இருக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ரம்யா கிருஷ்ணன் வம்சம், கலசம், தங்கம், ராஜகுமாரி, வம்சம் என நிறைய தொடர்கள் நடித்துள்ளார். கடைசியாக 2020 ஆம் ஆண்டு தெலுங்கில் நாக பைரவி என்ற தொடரில் நடித்துள்ளார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள சீரியலில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருக்கிறார்.
இந்த பதிவும் உதவலாம் : பீச் ஓரத்தில் கர்ப்பகால போட்டோ ஷூட் செய்த சீரியல் நடிகை காயத்ரி!

அக்டோபர் 9 ஆம் தேதி முதல் நள தமயந்தி என்ற சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் ரோஜா சீரியல் பிரபலம் பிரியங்கா நல்காரி கதாநாயகியாக நடிக்கிறார். சீரியலில் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் அம்மன் கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். சீரியல் முழுவதும் ரம்யா கிருஷ்ணன் தொடருவாரா அல்லது சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாரா என தெரியவில்லை. ஆனால் இவரின் சீரியல் எண்ட்ரியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com