
ஒவ்வொரு வீடுகளிலும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மற்றும் அலுவலகத்திற்குச் செல்லும் பெரியவர்கள் நிச்சயம் இருப்பார்கள். இவர்களுக்காக என்ன சமைக்கலாம் என்று யோசித்தே சில நேரங்களில் தலையே வலித்துவிடும். பெரும்பாலும் பலரது வீடுகளில் தயிர், எலுமிச்சை, புளி சாதம், சாம்பார், ஏதாவது பொரியல் ஒன்று நிச்சயம் இடம் பெற்றிருக்கும். இதைத் தொடர்ச்ச்சியாக செய்துக் கொடுக்காமல் நமக்கும் சளிப்பாகிவிடும். சாப்பிடும் குழந்தைகளுக்கும் இந்த சாப்பாடுகளைப் பார்த்தாலே வெறுமையாகிவிடும்.
இந்த சூழலை மாற்ற நினைப்பதோடு, உங்களது குழந்தைகளுக்கு ஆரோக்கியம் மற்றும் சுவையை வழங்கும் ஏதாவது ஒரு ரெசிபியை செய்து தர வேண்டும் என்று நினைத்தால் கோதுமை மாவைப் பயன்படுத்தி புரோட்டா செய்துக் கொடுக்கலாம். அதுவும் கொஞ்சம் உடலுக்கு ஆற்றலை அளிக்கும் வகையில் முருங்கைக்காய் பயன்படுத்தி செய்துக் கொடுத்துப் பாருங்கள். நிச்சயம் இன்னொரு முறை வேண்டும் என்று தான் கூறுவார்கள். இதோ அதற்கான ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக.

மேலும் படிக்க: குழந்தைகளுக்கு ஹெல்த்தியான கோதுமை நூடுல்ஸ்!
வட இந்தியாவின் உணவு வகைகளில் மிகவும் பிரதான ஒன்று கோதுமை மாவைப் பயன்படுத்தி செய்யக்கூடிய சப்பாத்தி மற்றும் புரோட்டா. கீரை, உருளைக்கிழங்கு போன்றவற்றை வைத்து எல்லாம் பராத்தா செய்வார்கள். இந்த வரிசையில் இன்றைக்கு முருங்கைக்காய் பரோட்டா ரெசிபி.
மேலும் படிக்க: குழந்தைகளின் ஸ்நாக்ஸ்க்கு மாம்பழ லட்டு செய்துக் கொடுங்க!
இந்த ரெசிபிக்கு பட்டாணி குருமா, சிக்கன் மசாலா போன்றவற்றை வைத்து சாப்பிடலாம். நிச்சயம் உங்களது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
Image source- Google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com