mangoo  laddu makin

குழந்தைகளின் ஸ்நாக்ஸ்க்கு மாம்பழ லட்டு செய்துக் கொடுங்க!

மாம்பழத்தில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது.
Editorial
Updated:- 2024-06-24, 21:42 IST

மாம்பழங்களைப் பிடிக்காதவர்கள் யாருமே இருக்கவே முடியாது. அந்தளவிற்கு மாம்பழ சீசனுக்காக காத்திருப்பார்கள். அல்போன்சா, கிளி மூக்கு, பஞ்சவர்ணம், மல்கோவா என விதவிதமான மாம்பழங்கள் விற்பனையில் உள்ள நிலையில் அவற்றை எப்போதும் போல அப்படியே சாப்பிடுவது என்பது சில நேரங்களில் வெறுப்பாக்கிவிடும். உங்களுக்காகவே மாம்பழங்களை வைத்து ருசியான லட்டு ரெசிபியை எப்படி செய்யலாம்? என்பது குறித்த குக்கிங் டிப்ஸ் இதோ.

mango coconut

மாம்பழ லட்டு ரெசிபி:

எப்போதும் நாம் சாப்பிடக்கூடிய லட்டுகளைப் போன்றில்லாமல் வழக்கமான லட்டுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ள மாம்பழ லட்டு. சுவையானது மட்டுமல்ல, இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு உடனடி ஆற்றலையும் தருகிறது.

தேவையான பொருட்கள்:

  • மாம்பழம் - 3
  • தேங்காய் - சிறிதளவு
  • ஏலக்காய்- 3
  • நட்ஸ் - சிறிதளவு

செய்முறை:

  • சுவையான மாம்பழ லட்டு ரெசிபி செய்வதற்கு முதலில் ஒரு தடினமான கடாயில் தேங்காயை சுமார் 3 நிமிடங்கள் அல்லது வாசனை வரும் வரை நன்கு சூடாக்கவும். லேசாக வறுக்க வேண்டும். பழுப்பு நிறம் மற்றும் அடி பிடிக்காத வரை நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • இதனுடன் மாம்பழங்களை கூழாக்கி நன்கு கலக்கும் வரை சேர்த்து கிளற வேண்டும். பின்னர் மாங்காய் மற்றும் தேங்காய் கலவையுடன் சிறிதளவு பால், ஏலக்காய் தூள் மற்றும் நட்ஸ்களைச்சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
  • குறிப்பாக இந்த கலவை அடிப்பிடித்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இதன் சுவை மாறிவிடும். எனவே லட்டு பிடிப்பதற்கான நிலைத்தன்மை வந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
  • சூடு ஆறியதும் உள்ளங்கையில் வைத்து சிறிய சிறிய உருண்டைகளாகப் பிடித்து எடுத்தால் போதும் சுவையான மாம்பழ லட்டு ரெசிபி ரெடி.
  • இதை நீங்கள் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் போன்று செய்து தரலாம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு பேருதவியாக உள்ளது. எனவே இனி சீசன்களில் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய மாம்பழங்களை வைத்து ருசியாக இதுபோன்ற லட்டுகளை செய்து சாப்பிடுங்கள். நிச்சயம் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

dry fruit and mango  laddu

மாம்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

மாம்பழத்தில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது. பருவ காலங்களில் ஏற்படக்கூடிய பல நோய் பாதிப்பிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கிறது. மேலும் இதில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, நீர்ச்சத்துக்கள்,புரதம், கொழுப்பு, வைட்டமின் ஈ, மெக்னீசியம், கால்சியம், அயர்ன் போன்ற பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் உள்ளதால் இதய ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்குத் தீர்வு காண்பதற்கு உதவியாக உள்ளது. எனவே முக்கனிகளில் முதன்மை பழமான மா வைக் கட்டாயம் உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ள மறந்துவிடாதீர்கள்.

 

 

 

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com