wheat noodles recipe

குழந்தைகளுக்கு ஹெல்த்தியான கோதுமை நூடுல்ஸ்!

<span style="text-align: justify;">வீட்டில் உள்ள கோதுமை மாவை வைத்து&nbsp; ஹெல்த்தியான நூடுல்ஸ் செய்து சாப்பிடலாம்.</span>
Editorial
Updated:- 2024-06-26, 10:17 IST

குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுப்பொருட்களில் ஒன்றாக உள்ளது நூடுல்ஸ். அம்மா பசிக்குது எனக்கு நூடுல்ஸ் சீக்கிரம் செய்துக் கொடுங்க, என்ற வார்த்தைகளை ஒவ்வொரு வீடுகளில் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். அந்தளவிற்கு குழந்தைகள் மனதில் இடம் பிடித்துள்ள ரெசிபி நூடுல்ஸ். ஆனாலும் தொடர்ச்சியாக கடைகளில் விற்பனை செய்யப்படும் பாக்கெட் நூடுல்ஸ் செய்து சாப்பிட்டால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும். இதைத் தவிர்க்க விரும்பினால் வீட்டில் உள்ள கோதுமை மாவை வைத்து  ஹெல்த்தியான நூடுல்ஸ் செய்து சாப்பிடலாம். இதோ அதற்கான ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக.

samba

கோதுமை நூடுல்ஸ் ரெசிபி:

  • கோதுமை மாவு - 2 கப்
  • தண்ணீர் - அரை கப்
  • உப்பு - சுவைக்கு ஏற்ப
  • கேரட் - 50 கிராம்
  • பீன்ஸ் - 50 கிராம் 
  • முட்டைக்கோஸ் - 50 கிராம்
  • கறிவேப்பிலை
  • எண்ணெய் - தாளிப்பிற்கு ஏற்ப
  • கரம் மசாலா தூள் - சிறிதளவு
  • மிளகு தூள்- சிறிதளவு

மேலும் படிக்க:  குழந்தைகளின் ஸ்நாக்ஸ்க்கு மாம்பழ லட்டு செய்துக் கொடுங்க!

செய்முறை:

  • குழந்தைகளுக்கு ஹெல்த்தியான கோதுமை நூடுல்ஸ் செய்வதற்கு முதலில் ஒரு பெரிய கிண்ணத்தில் கோதுமை மாவுடன் உப்பை கலந்து வைக்கவும். 
  • பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பிசைந்துக் கொள்ளவும். அதிகமாக தண்ணீர் ஊற்றக்கூடாது. சப்பாத்தி மாவு பிசையும் பததத்திற்கு ஊற்றினால் போதும். மாவு பிசைந்தவுடன் சுமார் 20 நிமிடங்களுக்கு அப்படியே வைத்துக் கொள்ளவும்.
  • இதையடுத்து பிசைந்து வைத்துள்ள மாவை சிறிய சிறிய உருண்டைகளாக்கிக் கொள்ளவும். பின்னர் வழக்கம் போல சப்பாத்தி போன்று வட்டமாக உருட்டிக் கொள்ளவும்.
  • இதைத் தொடர்ந்து கூர்மையான கத்தியின் உதவியுடன் மெல்லிய கீற்றுகளாக வெட்டி நூடுல்ஸ் வடிவத்திற்கு வெட்டிக் கொள்ளவும். அல்லது நூடுல்ஸ் செய்வதற்காகவே உள்ள கருவியில் வைத்தும் செய்யலாம்.
  • பின்னர் கொதிக்கும் நீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சுமார் 2-3 நிமிடங்கள் அல்லது மாவு மேற்பரப்பில் மிதக்கும் வரை சமைத்தால் போதும் கோதுமை நூடுல்ஸ் ரெடி.

தாளிப்பதற்கு: 

  • மேற்கூறிய முறைகளில் கோதுமை நூடுல்ஸ் செய்து முடித்த பின்னதாக தாளிப்பதற்குத் தேவையான பொருட்களைத் தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும்.
  • பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் கூற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும். தொடர்ந்து கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் , குடை மிளகாய் போன்ற அனைத்துக் காய்கறிகளையும் வேக வைக்கவும். இதையடுத்து கரம் மசாலா, மிளகு தூள் சேர்த்து சிறிது நிமிடங்கள் வதக்க வேண்டும்.

veg noodle

  • காய்கறிகள் வெந்தவுடன் வேக வைத்து வைத்துள்ள நூடுல்ஸை உடன் சேர்த்து வதக்கினால் போதும். சுவையான மற்றும் ஹெல்த்தியான கோதுமை நூடுல்ஸ் ரெடி. எவ்வித கெமிக்கல் பொருட்களும் உபயோகிக்கவில்லை என்பதால் குழந்தைகளுக்கு உடலுக்கு ஆற்றலைத் தரும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

மேலும் படிக்க: ஹெல்தியான கறிவேப்பிலை சிக்கன் சுக்கா சாப்பிட ஆசையா? இதோ ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக!

Image source - Google 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com