
நமது தினசரி சமையலில் பெரிதும் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகையாக கொத்தமல்லி விளங்குகிறது. அதன் புத்துணர்ச்சியூட்டும் வாசனை மற்றும் சுவைக்காக, இது பலரின் விருப்பத்திற்குரிய ஒரு பொருளாக உள்ளது. இது மட்டுமின்றி நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கொத்தமல்லி முக்கிய பங்கு வகிக்கிறது. அதனடிப்படையில், கொத்தமல்லியின் நன்மைகளை இந்தக் கட்டுரையில் காணலாம்.
மேலும் படிக்க: இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும் வெந்தய தண்ணீர்; நோட் பண்ணுங்க மக்களே
கொத்தமல்லி இலைகளும், விதைகளும் செரிமான கோளாறுகளை சரிசெய்ய பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், சாப்பிட்ட பிறகு ஏற்படும் வயிறு உப்புசம் மற்றும் அஜீரணக் கோளாறுகளையும் இது குறைக்கிறது. கொத்தமல்லி விதைகளை நீரில் ஊறவைத்து அருந்துவது, அஜீரணம், அமிலத்தன்மை மற்றும் வயிற்று பிடிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த வீட்டு வைத்தியமாகும். இது குடல் செயல்பாட்டை மேம்படுத்துவதால், ஊட்டச்சத்துகள் சிறப்பாக உறிஞ்சப்படுகின்றன.

கொத்தமல்லியின் மற்றொரு முக்கிய நன்மை, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவது. கொத்தமல்லி விதைகளில் உள்ள பொருட்கள், உடலின் குளுக்கோஸ் கையாளும் திறனை அதிகரிக்கும் நொதிகளை தூண்டுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது நாள் முழுவதும் ஆற்றல் அளவை நிலையாக வைத்திருக்க உதவுகிறது.
கொத்தமல்லியில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை இதய நோய்களுக்கு காரணமான ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடுகின்றன. கொத்தமல்லி, கெட்ட கொழுப்பின் (LDL) அளவைக் குறைத்து, நல்ல கொழுப்பின் (HDL) அளவை அதிகரிக்க உதவுகிறது. அதன் இயற்கையான டையூரெடிக் (diuretic) தன்மை, உடலில் அதிகப்படியான சோடியம் சேர்வதை தடுத்து, இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.
மேலும் படிக்க: Uses of cumin water: செரிமானத்தை சீராக்குவதில் இருந்து நச்சுகளை அகற்றுவது வரை; சீரக தண்ணீரின் 6 அற்புத பயன்கள்
கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் பிற நுண்ணூட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இவை உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகின்றன. கொத்தமல்லி எண்ணெய்யில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், இது உடலில் ஏற்படும் தொற்றுகளை எதிர்த்து போராடுகிறது.

கொத்தமல்லி ஒரு இயற்கையான நச்சு நீக்கி (detoxification agent) ஆகும். இது சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர் வழியாக உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றும் செயல்முறையை எளிதாக்குகிறது. தினமும் கொத்தமல்லி தண்ணீர் அருந்துவது அல்லது உணவில் சேர்த்துக் கொள்வது, உடலின் நச்சு நீக்கும் அமைப்புகளுக்கு உறுதுணையாக இருக்கும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com