herzindagi
image

உணவில் பருப்பு வகைகளைத் தவிர்க்கும் நபர்களாக நீங்கள்? அப்படின்னா இந்த பாதிப்புகளெல்லாம் நிச்சயம்!

மனிதர்கள் ஒவ்வொருவரும் சாப்பிடக்கூடிய உணவு வகைகளில் புரதம் மற்றும் வைட்டமின்கள் அதிகம் நிறைந்த பருப்பு வகைளைக் கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Editorial
Updated:- 2025-11-04, 23:44 IST

நம்முடைய ஒவ்வொரு வீட்டின் சமையல் அறைகளிலும் பாசிப்பருப்பு, துவரம் பருப்பு, பீன்ஸ் போன்ற பல்வேறு பருப்பு வகைகள் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். சைவ உணவுகளை விரும்பி சாப்பிடும் நபர்களாக இருந்தால் கட்டாயம் வாரம் முழுவதும் கூட எப்படியாவது பருப்புகளை உணவில் சேர்த்துக் கொள்வார்கள். நெய் மற்றும் பருப்புகளை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது இதில் உள்ள இரும்புச்சத்துக்கள் உடலின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. இதோடு உடல் முழுவதும் ஆக்ஸிஜனை சீராக கொண்டு செல்வதற்கும் பருப்புகளில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பேருதவியாக உள்ளது. உடலின் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க செய்கிறது. இவ்வாறு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கும் பருப்பு வகைகளைத் தவிர்க்கும் போது பலவிதமான பாதிப்புகளையும் சந்திக்க நேரிடும்.

மேலும் படிக்க: கிராம்பு தண்ணீர் ஒன்று போதும்; எவ்வித உடல் நல பிரச்சனைகளும் தீர்வு காண முடியும்

பருப்புகளைத் தவிர்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள்:

  • உடலின் வளர்சிதை மாற்றம் சீராக இருந்தால் மட்டுமே உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கும். இதற்கு பருப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. எப்போது நீங்கள் உங்களது சமையல் அறையில் பருப்புகள் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறீர்களோ வளர்சிதை மாற்றம் சீராக இருக்காது.
  • பாசிப்பருப்பில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் செரிமானம் சீராக நடைபெறும். உடலின் எடையையும் கணிசமாக நிர்வகிக்க முடியும். எப்போது பருப்பைத் தவிர்க்கிறீர்களோ? நிச்சயம் செரிமான பிரச்சனையோடு தான் வாழ முடியும்.

 

மேலும் படிக்க: பற்களை வலுவாக்க உதவும் ஆயுர்வேத பற்பொடியை சுலபமாக வீட்டிலேயே தயார் செய்யும் முறை!

  • கொழுப்புகளைக் குறைக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் கொண்டு பருப்பு வகைகளை உணவு முறையில் தவிர்க்கும் போது, கெட்ட கொழுப்புகள் உடலில் சேர்ந்து இதய நோய் பிரச்சனைக்கு வழிவகுக்கிறது.ஷ
  • இரத்த்தில் குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாக வெளியிடுவதோடு இரத்த அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கிறது. அதிகளவில் பாசிப்பருப்பு மற்றும் துவரம் பருப்பு போன்றவற்றை உணவு முறைகளில் தவிர்க்கிறீர்களோ? அப்போது சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

Image source - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com