Walnut Butter : பீனட் பட்டர் சாப்பிட்டு இருப்பீங்க, ஒரு முறை இப்படி வால்நட் பட்டர் செய்து பாருங்க!

வீட்டில் உள்ள சில எளிமையான பொருட்களைக் கொண்டு சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த இந்த அற்புதமான வால்நட் பட்டரை செய்திடலாம்…

home made walnut butter quick and easy
home made walnut butter quick and easy

பொதுவாக குழந்தைகளுக்கு பீனட் பட்டர் என்றால் மிகவும் பிடிக்கும். இது ஆரோக்கியத்திற்கு நல்லதும் கூட. அதிலும் வீட்டிலேயே செய்யும்பொழுது முழு நன்மைகளையும் பெற முடியும். உங்களுக்கு பீனட் பட்டர் பிடிக்கும் என்றால், இந்த வால்நட் பட்டரையும் செய்து ருசித்து பாருங்கள்.

வால்நட் பட்டர் தயாராப்பில் பயன்படுத்தக்கூடிய பொருட்களை ஆரோக்கியமாக தேர்வு செய்து, சுகாதாரமாக வீட்டிலேயே செய்து சாப்பிட்டு பாருங்கள். இனி கடையில் விற்கும் ஜாம், பட்டருக்கு குட்பை சொல்லி விடலாம். வீட்டிலேயே சுவையான உணவுகளை ஆரோக்கியமான முறையில் சமைத்து சாப்பிடுவோம். இன்றைய பதிவில் பகிரப்பட்டுள்ள வால்நட் பட்டரும் உங்களுடைய விருப்பமான உணவாக மாறிவிடும். இதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

walnut butter recipe

  • அக்ரூட் பருப்புகள் அல்லது வால்நட் - 2கப்
  • தேன் - 1 டேபிள்ஸ்பூன்
  • இலவங்கப்பட்டை பொடி - 1 டீஸ்பூன்
  • வெண்ணிலா எசன்ஸ் - 1 1/2 டீஸ்பூன்
  • எண்ணெய் - 1 ½ டீஸ்பூன்
  • உப்பு - தேவைக்கு ஏற்ப

செய்முறை

healthy walnut butter

  • ஒரு கடாயில் உடைத்த அக்ரூட் பருப்புகளை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும்.
  • குறைந்த தீயில் வைத்து வாசனை வரும் வரை வறுத்து, ஆற விடவும்.
  • இப்போது ஒரு மிக்ஸர் ஜாரில் வறுத்த அக்ரூட் பருப்புகள் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.
  • இதனை இடைவெளிகள் விட்டு தொடர்ந்து அரைக்கவும். அக்ரூட் பருப்புகளில் உள்ள எண்ணெய் வெளியேறத் தொடங்கும்.
  • இந்த சமயத்தில் எண்ணெய், தேன், உப்பு மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைக்கவும்.
  • எல்லாம் ஒன்று சேர அரை பட்டு கிரீமியான பதத்திற்கு வரும் வரை அரைக்கவும்.
  • இதனை ஒரு கண்ணாடி ஜாடிக்கு மாற்றி சேமித்து வைக்கலாம்.
  • போதுமானவரை, தேவைப்படும் பொழுது சிறிய அளவுகளில் ஃபிரஷ்ஷாக தயாரித்து பயன்படுத்தவும்.

இந்த பதிவும் உதவலாம்: உடல் எடை வேகமாக குறைய இப்படி சூப் செய்து குடிங்க!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP