herzindagi
image

புரோட்டின்கள் அதிகம் நிறைந்த பச்சைப்பயறு சப்பாத்தி; வெறும் 20 நிமிடங்களில் சுலபமாக செய்யும் முறை!

புரதச்சத்துக்கள் அதிகம் நிறைந்த பச்சைப்பயறு கொண்டு சப்பாத்தி செய்து சாப்பிடும் போது, உடல் ஆரோக்கியத்தை வலிமைப்படுத்த உதவுகிறது.
Editorial
Updated:- 2025-11-21, 22:27 IST


பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மற்றும் அலுவலகத்திற்குச் செல்லக்கூடிய ஊழியர்கள் பணிக்குச் செல்லும் போது என்ன மதிய உணவு செய்துக் கொடுக்கலாம்? என்ற தேடல் அதிகளவில் இருக்கும். புளி சாதம், லெமன் சாதம், தயிர் சாதம், புளிக்குழம்பு போன்ற வழக்கமான உணவுகளைச் செய்துக் கொடுக்கும் பெரியவர்கள் எப்படியாவது சாப்பிட்டு விடுவார்கள். ஆனால் சில குழந்தைகள் சாப்பிடப் பிடிக்கவில்லையென்று அப்படியே டிபன் பாக்ஸை சாப்பிடாமல் வீட்டிற்குக் கொண்டு வந்து விடுவார்கள். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் அவர்களுக்குப் பிடித்தவாறு ஏதாவது உணவைச் சமைத்துக் கொடுக்க வேண்டும். இதற்கு சிறந்த தேர்வாக உள்ளது ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த பச்சைப் பயறு சப்பாத்தி செய்துக் கொடுக்கலாம். எப்படி செய்ய வேண்டும்? இதற்கு என்னென்ன பொருட்கள் தேவை? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

பச்சைப்பயறு சப்பாத்தி செய்யத் தேவையான பொருட்கள்:

  • பச்சைப்பயறு -2 கப்
  • மிளகாய் - 2
  • சீரகம் - 2 டீஸ்பூன்
  • கோதுமை மாவு - 2 கப்
  • உப்பு - சுவைக்கு ஏற்ப
  • தண்ணீர் - போதுமான அளவு

மேலும் படிக்க: சேப்பங்கிழங்கு கிழங்கு இலைகளை உணவில் சேர்ப்பதால பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்

பச்சைப் பயறு செய்யும் முறை:

  • உடலுக்கு ஆற்றலை அளிக்கும் பச்சைப் பயறு சப்பாத்தி செய்வதற்கு முதலில் பச்சைப் பயறு தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரத்திற்கு நன்கு ஊற வைத்துக் கொள்ளவும்.
  • இதையடுத்து ஊற வைத்த பச்சைப்பயறு, இரண்டு மிளகாய் மற்றும் 2 டீஸ்பூன் சீரகம் போன்றவற்றை மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும். நைஸாக அரைத்த பின்னதாக ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளவும்.

மேலும் படிக்க: உடல் பருமனாக உள்ளதா? எடையைக் குறைக்க உதவும் ராகி சூப் தயார் செய்யும் முறை!

  • பின்னர் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்துக் கொள்ளவும். அரைத்து வைத்துள்ள பச்சைப் பயறு கலவையை ஊற்றி நன்கு பிசைந்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்துக் கொள்ளவும்.
  • சிறிய சிறிய உருண்டையாக்கி சப்பாத்தி கட்டையில் தேய்த்து எடுக்கவும். இறுதியாக தோசைக்கல்லை சூடேற்றி தேய்த்து வைத்த மாவை சுட்டெடுத்தால் போதும். சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த பச்சைப் பயறு சப்பாத்தி ரெடி.
  • புரதச்சத்துக்கள் அதிகம் நிறைந்த பச்சைப் பயறு சப்பாத்தி சைவ உணவு உண்பவர்களுக்கு சிறந்த தேர்வாக உள்ளது. உடலுக்கு ஆற்றலை அளிப்பதோடு இரத்த அழுத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

 Image source - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com