குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளைக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பது ஒவ்வொரு அம்மாக்களின் முக்கியமான கடமையாகும். ஆனால் என்ன? இன்றைய குழந்தைகளுக்கு கடலை மிட்டாய், பொரி உருண்டை, கொலுக்கட்டை போன்ற ஸ்நாக்ஸ்களை விரும்பி சாப்பிட மாட்டார்கள். மாறாக சாக்லேட், பப்ஸ், பர்க்கர் போன்ற தின்பண்டங்களின் மீது அதிக நாட்டம் காட்டுகிறார்கள். இதை மாற்றம் வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களில் நீங்களும் ஒருவரா? அப்படின்னா உங்கள் குழந்தைகளுக்கு வழக்கமாக செய்யக்கூடிய ஊட்டச்சத்துள்ள ஸ்நாக்ஸ்களை கொஞ்சம் வித்தியாசமாக கொடுக்க முயற்சிக்கலாம்.
சர்க்கரை வள்ளிக்கிழங்குகளை வேக வைத்து மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்றில்லை. கொஞ்சம் வித்தியாசமாக பான் கேக்குகளாக நீங்கள் சமைத்து சாப்பிடலாம். இதோ இந்த ரெசிபியை எப்படி செய்யலாம்? என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- வேக வைத்த சர்க்கரை வள்ளிகிழங்கு - 1 கப்
- கோதுமை மாவு - 1 கப்
- தேங்காய் மாவு - அரை கப்
- நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
- பாதாம், வால்நட், முந்திரி பொரித்தது- கால் கப்
- உப்பு- தேவையான அளவு
செய்முறை:
மேலும் படிங்க: எலும்புகளை வலுப்படுத்தும் ஆரோக்கிய பானங்கள்!
- பேன் கேக் செய்வதற்கு முதலில் சர்க்கரை வள்ளிகிழங்கை நீராவியில் வேக வைக்கவும். பின்னர் தனியாக ஒரு பாத்திரத்தில் வேக வைத்த சர்க்கரை கிழங்கை மசித்து வைத்துக் கொள்ளவும்..
- இதனுடன் கோதுமை மாவு, தேங்காய் மாவு மற்றும் நாட்டு சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும். சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்த பின்னதாக தட்டை போன்று தட்டி வைத்துக் கொள்ளவும்.
- இதையடுத்து தோசை தவாவில் பொன்னிறமாக வரும் வரை சுட்டு எடுக்கவும். இதையடுத்து ஒரு கிண்ணத்தில் சோயா சாஸ் மற்றும் தேன் இரண்டையும் மிக்ஸ் செய்து பான் கேக்கின் மீது தடவ வேண்டும். இறுதியில் பொரித்து வைத்துள்ள பாதாம், வால்நட், முந்திரி போன்றவை மேலே தூவினால் போதும் சுவையான சர்க்கரை வள்ளிகிழங்கு பேன் கேக் ரெடி. இதே போன்று சர்க்கரை வள்ளிக்கிழங்கில் வடை, சிப்ஸ் போன்ற குழந்தைகளுக்கு விருப்பமான ஸ்நாக்ஸ்களை செய்துக் கொடுக்கலாம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
மேலும் படிங்க:நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை சாறு!
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகளவில் உள்ளது. வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்களும் உள்ளதால் இவற்றை நீங்கள் உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குழந்தைகளுக்கு குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய பருவ கால தொற்றுகளைக் குணப்படுத்தவும் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உதவியாக இருக்கும்.
Image Credit: Google
Image Credit: Google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation