herzindagi
healthy drinks for bone health

strong Bones: எலும்புகளை வலுப்படுத்தும் ஆரோக்கிய பானங்கள்!

<span style="text-align: justify;">வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளைப் பராமரிக்க ஊட்டச்சத்துள்ள உணவுகளை உங்களது அன்றாட வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும்.</span>
Editorial
Updated:- 2024-01-30, 21:32 IST

நம்முடைய உடலின் வடிவமைப்பிற்கு உறுதுணையாக உள்ளது எலும்புகள். இவை வலுவிழக்கும்  போது முதுகு வளைவது முதல் எலும்பு சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளை அவர்கள் சந்திக்க நேரிடும். பெரும்பாலான மக்கள் வாழ்க்கையின் பிற்பகுதி வரை எலும்பு ஆரோக்கியத்தைப் புறக்கணிக்கிறார்கள். இளம் வயதில்  இருந்தே மூட்டு வலி, கால் வலி போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. குறிப்பாக பெண்கள் அதிகளவில் மூட்டு வலி பிரச்சனைக்கு உள்ளாகின்றனர் என ஆய்வுகள் கூறுகின்றனர். வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளைப் பராமரிக்க ஊட்டச்சத்துள்ள உணவுகளை உங்களது அன்றாட வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். இதோ இன்றைக்கு எலும்புகள் ஆரோக்கியத்திற்கு வலுச்சேர்க்கும் ஆரோக்கிய பானங்கள் என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளுங்கள்.

symptoms of pain

எலும்புகளை உறுதியாக்கும் ஆரோக்கிய பானங்கள்:

  • பால் - எலும்புகள் வலுவாக இருக்க கால்சியம் இன்றியமையாத ஒன்று. பால் கால்சியத்தின் வளமான ஆதாரமாக உள்ளதால், தினமும் பாலை உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ளவும். மேலும் இதில் உள்ள வைட்டமின் டி உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
  • பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களில் தயாரிக்கப்படும் ஜூஸ்களை பருகலாம். இதில் உள்ள தாதுக்கள் மற்றும் பைட்டோநியூட்ரியன்கள் எலும்புகளை வலுப்படுத்த உதவியாக உள்ளது.

 மேலும் படிங்க:குளிர்காலத்தில் காது வலி ஏன் ஏற்படுகிறது? எப்படி சரி செய்வது?

  • ஆரஞ்சு ஜூஸ் பருகுவது உடலுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டியை நமக்கு வழங்குவதோடு எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. இவற்றைத் தொடர்ச்சியாக உணவு முறையில் சேர்க்கும் போது ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கவும் உதவியாக உள்ளது.
  • கிரீன் டீயில் உள்ள இரும்புச்சத்து, வைட்டமின் கே மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு பேருதவியாக உள்ளது.
  • உங்களுடைய உணவு முறையில் வாரத்திற்கு ஒருமுறையாவது ஆட்டுக்கால் குழம்பு அல்லது சாறு சாப்பிட வேண்டும். கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட தாதுக்களின் ஆதாரங்கள் உள்ளதால் எலும்புகளுக்கு ஆற்றலை அளிக்கிறது.
  • தயிர், பால், முட்டைக்கோஸ் அல்லது கீரை போன்ற இலை கீரைகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றைக் கலந்து எலும்புகளுக்கு ஆரோக்கியமான ஸ்மூத்திகளை உருவாக்கலாம். இதில்  ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களுக்கு சியா விதைகள் அல்லது ஆளிவிதைகள் போன்ற பொருட்களைச் சேர்க்கும் போது எலும்புகளுக்கு வலுவாக அமைகிறது. மேலும் இளநீர் பானங்களையும் நீங்கள் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் எப்போதும் வலுவுடன் இருக்கும்.

strong bones

மேலும் படிங்க: மாதவிடாய் நிற்கும் போது பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்!

இதுபோன்ற ஆரோக்கியமான பானங்களை நீங்கள் உங்களது உணவுமுறையில் வழக்கப்படுத்திக் கொண்டாலும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தினமும் காலை அல்லது மாலை என இரு வேளைகளில் உட்கார்ந்து எழுந்திருத்தல், சூரியநமஸ்காரம் போன்றவற்றை மேற்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளவும்.

Image Credit: Google

 

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com