herzindagi
image

வீட்டில் 5 வயதில் குழந்தைகள் உள்ளார்களா? உடல் ஆரோக்கியத்திற்கு இந்த உணவுகளெல்லாம் கொடுக்காதீர்கள்!

குழந்தைகள் பிறந்து முதல் 5 வயது வரை அவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கொடுப்பது அவசியம். ஆனால் இன்றைக்கு கலாச்சார மாற்றம் என்கிற பெயரில் பெயர் தெரியாத உணவுகளைக் கொடுக்கும் போது உடல் நலம் பாதிக்கப்படுகிறது. இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றால் குழந்தைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்க வேண்டும் என்பது குறித்த தகவல்கள் இங்கே.
Editorial
Updated:- 2025-11-17, 23:06 IST

குழந்தைகளைப் பாதுகாப்புடனும், ஆரோக்கியமாகவும் வளர்ப்பது என்பது ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் பெரும் சவாலான விஷயம். அடம்பிடிக்கும் குழந்தைகளைச் சமாளிப்பது முதல் அவர்களுக்கு நன்னடத்தைக் கற்றுக் கொடுத்து ஆரோக்கியத்துடன் வளர்க்க வேண்டிய முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் பெற்றோர்கள். இன்றைக்கு குழந்தைகள் அடம்பிடித்து அழுகிறார்கள் என்பதற்காக தேவையில்லாத உணவுகளை வாங்கிக் கொடுக்கக்கூடாது. மாறாக ஊட்டச்சத்துள்ள உணவுகளைக் கொடுக்க வேண்டும் . இன்றைக்கு 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எந்தெந்த உணவுகளை சாப்பிடக்கூடாது? என்பதைப் பற்றி இங்கே அறிந்துக் கொள்ளலாம்.


நொறுக்குத் தீனிகள்:

குழந்தைகளுக்கு சிப்ஸ், பப்ஸ் போன்ற காரசாரமான நொறுக்குத் தீனிகள் மிகவும் பிடிக்கும். அதற்காக குழந்தைகளுக்குக் கொடுக்கக்கூடாது. பாக்கெட்டுகளில் வைத்து விற்பனை செய்யப்படும் சிப்ஸ் வகைகளைச் சாப்பிடும் போது குழந்தைகளுக்கு பல நேரங்களில் வாந்தி, வயிற்று வலி, அஜீரண கோளாறு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக குழந்தைகளின் செரிமான அமைப்பு பெரியவர்கள் போன்று இருக்காது. எனவே குடல் பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க: உறங்குவதற்கு முன் என்ன செய்ய வேண்டும்? குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்த உதவும் எளிய குறிப்புகள்


குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ்களில் ஒன்றாக உள்ளது பாப்கார்ன். மொறு மொறுவென்று இருப்பதால் சரியாக மெல்லாமல் குழந்தைகள் அதிகளவில் சாப்பிடுவார்கள். இதில் உள்ள சிறு சிறு துகள்கள் அவர்களின் நாசியில் ஒட்டிக்கொண்டு மிகவும் சிரமப்படுவார்கள். எனவே இதைத் தவிர்ப்பது நல்லது. ஒருவேளை குழந்தைகள் வேண்டும் என்று அடம்பிடித்தாலும் அவர்களுக்கு இதன் பாதிப்புகளைப் பொறுமையாக சொல்லிக் கொடுக்கவும். அல்லது மொபைலில் வீடியோ வாயிலாக நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதால் என்னென்ன? பாதிப்புகள் ஏற்படும் என்பதை அவர்களுக்குக் காண்பிக்கவும்.

 நட்ஸ் வகைகள்:

குழந்தைகளுக்கு பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற நட்ஸ்கள் மிகவும் பிடிக்கும். அதற்காக அதிகம் சாப்பிடக் கொடுக்கக்கூடாது. ஒருவேளை அவர்கள் விரும்புகிறீர்கள்? என்பதற்காக அதிகம் கொடுக்கக்கூடாது. இதை நன்றாக அவர்கள் மென்று சாப்பிட மாட்டார்கள். இதனால் செரிமானம் பாதிக்கப்படுவதோடு வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

மேலும் படிக்க: சவால்களைத் தாண்டி குழந்தைகள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? பெற்றோர்கள் இதை மட்டும் செய்யுங்க!

குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் வீட்டை விட்டு வெளியில் சென்றாலே குளிர்பானங்கள் வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள். அதிலும் 2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் வாங்கித் தரும் வரை அடம்பிடிப்பார்கள். இப்படி அதிகளவில் அடம்பிடிக்கிறீர்கள் என்பதற்காக? குழந்தைகளுக்கு குளிர்பானங்கள் கொடுக்கக்கூடாது. அதிகளவு சர்க்கரை மற்றும் காபின் அதிகளவு உள்ளதால் உடல் பருமன், வாயு மற்றும் செரிமான பிரச்சனையைப் பாதிக்கும்.

பொதுவாக தேன் சாப்பிடுவது உடலுக்கு ஆற்றலை அளிப்பதோடு செரிமான அமைப்பையும் சீராக்கும். ஆனால் குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமாக கொடுக்கும் போது செரிமானமாவதற்கு நேரம் எடுக்கும். எனவே குழந்தைகளுக்கு தேன் கொடுப்பதைத் தவிர்க்கவும். சிறிதளவு கொடுக்கலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதோடு மட்டுமின்றி அதீத குளிர்ச்சியை ஏற்படுத்தும் பழச்சாறுகள், சரியாக வேக வைக்காத இறைச்சிகள் போன்ற பல உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ஒருவேளை குழந்தைகளுக்கு உணவுகள் கொடுத்தாலும் முதலில் கொஞ்சமாக கொடுப்பது நல்லது. .

Image source - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com