குழந்தைகளைப் பொறுப்புடன் வளர்ப்பது என்பது தாய்மார்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக உள்ளது. அதுவும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் அதீத அக்கறையுடன் இருக்க வேண்டும். குழந்தைப் பிறந்த முதல் ஆறு மாத காலங்களுக்குத் தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த உணவுகளும் கொடுக்கக்கூடாது. அதே சமயம் குழந்தைகளுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வேண்டும் என்றால், ஆறு மாத காலத்திற்குப் பிறகு திட இணை உணவுகளைக் கட்டாயம் கொடுக்க வேண்டும். என்னென்ன உணவுகள்? எப்படி கொடுக்க வேண்டும்? என்பது குறித்த முழு விபரங்கள் இங்கே.
மேலும் படிக்க: குழந்தை வளர்ப்பு கடினமாக இருக்கிறதா? பெற்றோர் கடைபிடிக்க வேண்டிய 5 அடிப்படை அம்சங்கள்
ஆறு மாத காலத்திற்குப் பிறகு குழந்தைகளுக்கு அரிசிக் கஞ்சி சாதம் கொடுக்கலாம். புழுங்கல் அரிசி, பொரிகடலை மற்றும் ஏலக்காய் போன்றவற்றைத் தனித்தனியாக வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும். பின்னர் இதை மிக்ஸியில் நைஸாக அரைத்து ஒரு டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளும். குழந்தைகளுக்கு எப்போது உணவு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ? அப்போது ஒரு பாத்திரத்தில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இந்த மாவையும் கலந்துக் காய்ச்சிக் கொடுக்கவும். அரிசி மற்றும் பொரிகடலையில் உள்ள கார்போஹைட்ரேட்கள் மற்றும் வைட்டமின்கள் எளிதில் கிடைக்க உதவியாக இருக்கும்.
கேரட், பாசிப்பருப்பு போன்றவற்றை நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின்னர் வடித்து வைத்துள்ள சாதம் மற்றும் வேக வைத்த பொருட்களைச் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். இதை குழந்தைகளுக்கு காலை நேரத்தில் கொடுத்து வரும் போது, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் எளிதில் கிடைக்கும். இதோடு வைட்டமின் சி சத்துள்ள உணவுகளைக் கொடுக்கும் போது, அவர்களின் கண் பார்வைத் திறன் மேன்மை அடையும்.
குழந்தைப் பிறந்த முதல் ஆறு மாதங்களுக்குப் பிறகு திட இணை உணவுகளைக் கொடுக்கும் போது கவனம் தேவை. முதலில் அரிசியில் செய்யப்பட்ட சாதங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கவும். இதையடுத்து கோதுமை மாவை நன்கு காய்ச்சி கஞ்சியாக குடிக்கலாம்.
ராகி எனப்படும் கேப்பை மாவைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளைக் கொடுக்க முடியும். கேப்பையை தண்ணீரில் நன்கு ஊற வைத்துக் கொள்ளவம். பின்னர் மிக்ஸியில் அரைத்து அதன் பாலை மட்டும் எடுத்து சாதம் செய்து தரலாம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கும்.
Image credit - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com