herzindagi
image

உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் ஸ்மூத்தி; நன்மைகள் மற்றும் செய்முறை விளக்கம் இங்கே!

உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கவும், எப்போதும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்றால், காலை உணவை ஊட்டச்சத்துள்ளதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
Editorial
Updated:- 2025-10-28, 20:57 IST

மனிதர்களுக்கு காலை உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. ஆம் நாள் முழுவதும் வேலை புரிந்த அலுப்பில் இரவு நேரத்தில் அசந்து தூங்குவோம். அப்போது உடலுக்குத் தேவையான அத்துணை ஆற்றல்களையும் இழக்க நேரிடும். இதை சமாளிக்க வேண்டும் என்றால், காலையில் உடலுக்கு ஆற்றலை அளிக்கும் உணவுகளைக் கட்டாயம் சாப்பிட வேண்டும். ஆனால் இன்றைய தலைமுறையை சேர்ந்த ஆண்களும், பெண்களும் உடலைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக டயட் என்கிற பெயரில் காலை உணவு உட்கொள்வதைத் தவிர்க்கிறார்கள். இது முற்றிலும் தவறான செயல். என்ன தான் மதியம் மற்றும் இரவு நேரத்தில் சாப்பிட்டாலும் காலை உணவில் இருக்கும் ஆற்றல் நிச்சயம் கிடைக்காது.

மேலும் படிக்க: குழந்தைகள் கொழு கொழுன்னு இருக்கணுமா? நேந்தரம் வாழைப்பழ பவுடர் கொடுங்க!

 

காலை உணவை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்:

காலையில் நாம் சாப்பிடக்கூடிய உணவுகள் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது. குறிப்பாக மூளைக்குத் தேவையான குளுக்கோஸை வழங்குகிறது. இதனால் நம்முடைய அறிவுசார் செயல்திறன் அதிகரிக்கும் என்பதோடு நினைவாற்றல், செறிவு மற்றும் படைப்பாற்றலையும் அதிகரிக்கிறது. இதோடு இரவு நேரத்தில் ஏற்பட்ட உடல் ஆற்றல் இழப்பை ஈடு செய்வதற்கு காலை உணவு பேருதவியாக உள்ளது.


காலை உணவிற்கு ஏற்ற ஸ்மூத்தி:

உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பதற்கும், உடலுக்குத் தேவையான ஆற்றலையும் அளிப்பதற்கும் நிச்சயம் இந்த ஸ்மூத்தி உதவியாக இருக்கும். இதோ அதை எப்படி செய்யலாம் என்பது குறித்த எளிய சமையல் குறிப்புகள் இங்கே.

மேலும் படிக்க: மழைக்காலங்களில் குழந்தைகள் காய்ச்சல், சளியால் அவதிப்படுவதைத் தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!

தேவையான பொருட்கள்:

  • ஊற வைத்த பாதாம் - 10
  • உலர்ந்த திராட்டை - 25 கிராம்
  • வாழைப்பழம் - 1
  • மாதுளை - 1 கப்
  • தேன் - சிறிதளவு
  • பால் - போதுமான அளவு

  • ஒரு மிக்ஸி ஜாரில் மேற்கூறிய அனைத்துப் பொருட்களையும் எடுத்துக்கொள்ளவும்.
  • நைஸாக நன்கு அரைத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிதளவு தேன் கலந்துக்கொள்ளவும்.
  • அனைத்துப் பொருட்களையும் அரைப்பதற்கு முன்னதாக உங்களுக்குப் போதுமான அளவு பால் கலந்துக் கொள்ள வேண்டும்.
  • இதை ஒரு டம்ளருக்கு மாற்றினால் போதும். உடலுக்கு ஆற்றலை அளிக்கும் காலை நேர உணவிற்கான ஸ்மூத்தி ரெடி.
  • இதைத் தினமும் காலையில் பருகினால் போதும். இந்த பொருட்களில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு ஆற்றலை அளிப்பதோடு, பல மணி நேரத்திற்கு பசி எடுக்காது. இதனால் தேவையில்லாத ஸ்நாக்ஸ்கள் சாப்பிடுவதைத் தவிர்ப்போம். உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும்.

 Image source - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com