herzindagi
image

மழைக்காலங்களில் குழந்தைகள் காய்ச்சல், சளியால் அவதிப்படுவதைத் தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!

குழந்தைகளுக்குக் குளிர்காலத்திற்கு ஏற்ற வகையில் கம்பளியினால் ஆடைகளை அணிய வேண்டும்.
Editorial
Updated:- 2025-10-13, 19:20 IST

மழைக்காலம் வந்தாலே குழந்தைகளைப் பாதுகாப்புடன் வைப்பது அனைத்துத் தாய்மார்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக உள்ளது. இந்த பருவக் காலங்களில் எத்தனை கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டாலும் எப்படியாவது குழந்தைகள் காய்ச்சல், சளி போன்ற பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இவற்றை எப்படி தடுப்பது? குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல் இருக்க என்னவெல்லாம் அவர்களின் அம்மாக்கள் வீட்டில் செய்ய வேண்டும்? என்பது குறித்த சில வழிமுறைகள் இங்கே.

மேலும் படிக்க: இளம் தலைமுறையினரிடம் அதிகரிக்கும் மாரடைப்பு அபாயம்; இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எளிய வழிகள் இதோ

சுத்தமாக வைத்தல்:

பிறந்த குழந்தை முதல் 10 வயதிலான குழந்தைகள் வீட்டில் இருந்தால் எப்போதும் வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீடு முழுவதும் ஆங்காங்கே தவழ்ந்து செல்லும் போது சுத்தம் இல்லையென்றால் நோய் தொற்று எளிதில் பரவக்கூடும். எனவே வீட்டை சுத்தமாக வைத்திருப்பதோடு வீட்டின் அருகாமையில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க: நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் 6 உணவுகள்; இவற்றை மிஸ் பண்ணாதீங்க மக்களே

ஊட்டச்சத்துள்ள உணவுகள்:

மழைக்காலங்களில் நோய் தொற்று பாதிப்பைத் தவிர்க்க வேண்டும் என்றால், குழந்தைகளுக்குக் கட்டாயம் ஊட்டச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். பயறு வகைகள், சிறுதானியங்கள், காய்கறிகள் போன்றவற்றைத் தினமும் கொடுப்பது நல்லது. தாய்ப்பால் கொடுக்கும் குழந்தைகளாக இருந்தால் தாய்மார்கள் தினமும் ஊட்டச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். இதன் மூலம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஓர் வாய்ப்பாக அமையும். குழந்தைகளுக்கு முடிந்தவரை அவ்வப்போது சமைக்கும் உணவுகளைக் கொடுப்பது நல்லது.

 

ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிதல்:

மற்ற பருவ காலங்களை விட மழைக்காலங்களில் குழந்தைகள் அடிக்கடி நோய்த் தாக்குதலுக்கு ஆளாக்குவார்கள். குறிப்பாக காய்ச்சல், சளி, மூக்கு ஒழுகுதல் போன்ற பாதிப்பை சந்திக்க நேரிடும். எனவே அவர்களை எப்போதும் கண்காணித்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக குழந்தைகள் சுறுசுறுப்புடன் இல்லையென்றால், வழக்கத்திற்கு மாறாக ஏதேனும் பிரச்சனைகள் தெரிந்தால் உடனே மருத்துவரின் அறிவுரையைக் கேட்பது நல்லது.

டயப்பர் மாற்றுதல்:

குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள் என்பதால் டயப்பரை பல தாய்மார்கள் பயன்படுத்துவார்கள். இது தவறில்லை. அதே சமயம் இதை அதிக நேரம் பயன்படுத்துவது தவறு. 2 மணி நேரத்திற்கு மாறாக டயப்பர் பயன்படுத்தக்கூடாது. ஒருவேளை பயன்படுத்தும் போது குழந்தைகளின் சருமத்தில் சொறி, எரிச்சல் போன்ற பிரச்சனை ஏற்படும். எனவே தாய்மார்கள் கவனமுடன் இருப்பது நல்லது.

மேலும் படிக்க: இருதய ஆரோக்கியம் முதல் உடல் எடை பராமரிப்பு வரை; சிறுதானியங்கள் மூலம் கிடைக்கும் நன்மைகள்

குளிர்காலத்திற்கு ஏற்ற ஆடை:

குழந்தைகளுக்கு தமக்கு குளிர் அடிக்கிறதா? என்பதைச் சொல்ல தெரியாது. எனவே குளிர் தாங்கும் அளவிற்கு பருத்தி மற்றும் கம்பளி போன்ற மழைக்கால ஆடைகளைக் குழந்தைகளுக்கு அணிய வேண்டும்.

Image source - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com