
ப்ரேக் பாஸ்ட் எனப்படும் காலை உணவு ஒவ்வொருவருக்கும் மிகவும் இன்றியமையாதது. காலை எழுந்ததிலிருந்து அனைத்துப் பணிகளையும் முடித்துவிட்டு தூங்குவது வரை நமது உடல் நீராகவும், ஆற்றலுடன் இயங்க வேண்டும். இதற்கு காலை உணவு கட்டாயம் சாப்பிட வேண்டும். ஆனால் அவசர கதியில் வீட்டு வேலைகளை முடித்து பணிக்குச் செல்வதே பலருக்கும் சிரமமான காரியமாகிவிட்டது. இந்த சூழலில் காலை உணவுகளை சரியான நேரத்தில் உட்கொள்வதற்கு நேரம் கிடைக்கவில்லையென்றால்? கவலை வேண்டாம். காலை உணவைச் சரிசெய்யும் வகையில் சில உணவு வகைகளை உணவு முறையில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு ஆற்றலை அளித்து நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருப்பதற்கு உதவியாக இருக்கும்.
காலையில் சரியான நேரத்திற்கு சாப்பிட முடியவில்லை என்றும் புலம்பும் நபர்கள் தயிரை உட்கொள்ளலாம். இதில் உள்ள புரோபயடிக்குள் செரிமான அமைப்பை சீராக்குகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நாள் முழுவதும் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது. சாதத்துடன் சிறிதளவு தயிர் கலந்து சாப்பிடுவது நல்லது.
மேலும் படிக்க: Morning routine: காலை எழுந்ததும் நீங்கள் செய்யக் கூடாத 5 தவறுகள்
பப்பாளி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய உணவுகளில் ஒன்றாக உள்ளது. இட்லி, தோசை சாப்பிடுவதற்கு நேரம் இல்லையென புலம்பும் நபர்கள் ஒரு சிறிய டப்பாவில் பப்பாளியை வெட்டி வைத்து சாப்பிடலாம். இவை உடலுக்கு ஆற்றலை அளிப்பதோடு குடல் இயக்கத்தையும் சீராக்குகிறது. உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து உடல் எடையையும் நிர்வகிக்கிறது.
பணிக்குச் செல்லும் அவசரத்தில் காலை உணவு சாப்பிட முடியவில்லை என்ற புலம்பல் வேண்டாம். நீங்கள் அலுவலகத்திற்குக் கிளம்பும் நேரத்தில் காய்கறிகளை வைத்து சூப்பாக செய்துக் கொள்ளவும். கேரட், பீட்ரூட், கொத்தமல்லி இலை, பச்சை காய்கறிகள் என உங்களிடம் எது உள்ளதோ? அதை நன்கு வேக வைதது வடிகட்டி சூப்பாக குடிக்கவும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு ஆற்றலை அளித்து நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
இதோடு மட்டுமின்றி வாழைப்பழம், ஊற வைத்த பாதாம், சிறுதானிய சாலட்டுகள் போன்றவற்றை காலையில் சாப்பிடவும். இவ்வாறு சாப்பிடும் போது உடலுக்குத் தேவையான ஆற்றலை அளித்து நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்புடன் வைத்திருக்க உதவுகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com