herzindagi
image

Healthy Smoothies: குளிர்காலங்களில் பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தி வலுமையுடன் இருக்கணுமா? இந்த ஸ்மூத்திகளைக் குடிங்க!

பெண்கள் தங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்றால்? நார்ச்சத்துக்கள், புரதம், கொழுப்புகள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த ஸ்மூத்திகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Editorial
Updated:- 2025-12-11, 13:53 IST

மழைக்காலம் வந்தாலே உடலில் பல்வேறு விதமான நோய் தொற்றுகளும் உடன் சேர்ந்து விடும். சளி, இருமல், காய்ச்சல், தொண்டை கரகரப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதோடு உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு சக்தி கொஞ்சம் கொஞ்சமாக குறையக்கூடும். ஆண்களை விட பெண்களுக்கு அதிக வேலைப்பளு இருக்கும். இதனால் என்ன தான்? அசதியாக இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளமாட்டார்கள். இந்த சூழலில் பெண்கள் தங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்றால்? நார்ச்சத்துக்கள், புரதம், கொழுப்புகள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த ஸ்மூத்திகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதோ உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும் ஸ்மூத்திகளின் லிஸ்ட்டுகள் இங்கே உங்களுக்காக..

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஸ்மூத்திகள்:


அன்னாசி ஸ்மூத்தி:

மழை, குளிர் போன்ற பருவ காலங்களில் வைட்டமின் சி மற்றும் ப்ரோமெலைன் சத்துக்கள் நிறைந்த அன்னாச்சி பழங்களை உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அன்னாசி பழ ஸ்மூத்திகளை ட்ரை பண்ணுங்க.

 மேலும் படிக்க: Pearl Millet Benefits: குளிர்காலத்தில் ஆரோக்கியமாக உடலை வைத்திருக்க உணவில் கம்பு சேர்த்துக் கொள்ளுங்கள்

  • அன்னாசி பழ துண்டுகள் - 1 கப்
  • வாழைப்பழம் - 1
  • தேங்காய் தண்ணீர் - அரை கப்
  • தயிர் - அரை கப்
  • சியா விதைகள் - 1 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள்- அரை தேக்கரண்டி
  • கீரை - அரை கப்

மேற்கூறியுள்ள அனைத்துப் பொருட்களையும் சரியான அளவில் எடுத்துக் கொண்டு, அதை மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்துக் கொண்டால் போதும். ஆரோக்கியம் நிறைந்த அன்னாச்சி பழ ஸ்மூத்தி ரெடி.

கீரை ஸ்மூத்திகள்:

கீரையில் இரும்புச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது. எனவே உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கீரையில் ஸ்மூத்திகளை ட்ரை பண்ணலாம். கீரை, பச்சை ஆப்பிள், வெள்ளரி, எலுமிச்சை சாறு, தண்ணீர் போன்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக கிரீம் வரும் வரை நன்கு கலந்துக் கொள்ளவும். இதை சரியாக செய்தாலே போதும் உடலுக்கு ஆற்றலை அளிக்கும் கீரை ஸ்மூத்திகள் ரெடி.


 மேலும் படிக்க:  Winter Laziness: குளிர்கால சோம்பலைப் போக்க இந்த எளிய 4 வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கவும்

ஆப்பிள் மசாலா ஸ்மூத்தி:

ஆப்பிளில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது இதோடு இரத்த சர்க்கரை அளவை சீராக்கும் இலவங்கப்பட்டையை வைத்தும் ஸ்மூத்திகள் செய்யலாம். இது பெண்களின் உடல் வலிமையை அளிப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இதை செய்வதற்கு நறுக்கிய ஆப்பிள், இனிப்பு இல்லாத பாதாம் பால், தயிர், ஆளி விரைகள், சிறிதளவு இலவங்கப்பட்டை தூள் போன்றவற்றை முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அனைத்துப் பொருட்களையும் கிரீம் வரும் வரை நன்கு கலக்கினால் போதும். சுவையான மற்றும் ஆரோக்கியமான ஸ்மூத்திகள் ரெடி.

Image source - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com