
குழந்தைகள் பெற்றெடுக்கும் போது கூட தாய்மார்கள் கஷ்டத்தை சந்தித்து இருக்க மாட்டார்கள். இயற்கையான முறையில் பிரசவிக்கிறார்கள் என்றால் ஒரு மணி நேரத்திற்குத் தான் வழி அதிகமாக இருக்கும். ஆனால் குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு ஏன் உங்க குழந்தை கொழு கொழுன்னு இல்லை, பால் சரியாக கொடுக்க மாட்டீயா? ஏன் குழந்தையை ஒழுங்கா கவனித்துக் கொள் என்பது போன்ற பல கேள்விகளை பலர் கூறி கேட்டிருப்போம். இந்த சூழலைத் தவிர்க்க என்ன செய்வது? என்ற தேடலில் உள்ள பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்களின் நீங்களும் ஒருவராக இருந்தால் இந்த கட்டுரை நிச்சயம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். ஆம் குழந்தைகளுக்க 6 மாத காலத்திற்குப் பிறகு இணை உணவுக் கொடுக்கும் போது நேந்தரம் பழங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பவுடர் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். இதோ வீட்டிலேயே எப்படி தயார் செய்ய முடியும்? இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்ன? என்பது குறித்து அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
மேலும் படிக்க: குழந்தை வளர்ப்பு: பெற்றோர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய குறிப்புகள்
மேற்கூறிய முறையில் தயார் செய்த நேந்தரம் வாழைப்பழ பவுடரை, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு காய்ச்சிக் கொள்ளவும். பின்னர் சூடு ஆறியதும் குழந்தைகளுக்குத் தினமும் ஊட்டி விடலாம்.
நிழல்காய்ச்சலில் காய வைத்து தயார் செய்த நேந்தரம் பொடியில் நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது.
மேலும் படிக்க: Parenting Tips: உங்கள் குழந்தைக்கு வாசிக்கும் பழக்கம் இல்லையா? இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவலாம்
குழந்தைகளுக்கு நேந்திரம் வாழைப்பழப் பொடியைக் கொடுக்கும் எளிதில் ஜீரணமாவதற்கு உதவுகிறது. மேலும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான எடை அதிகரிப்பிற்கும் உதவுவதோடு மூளை வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்புசக்தியை வலுப்படுத்தவும் உதவியாக உள்ளது.

நேந்தரம் வாழைப்பழங்களில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகளவில் உள்ளதால், உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகளை சமநிலைப்படுத்துகிறது. இதனால் குழந்தைகள் உடல் வளர்ச்சியும் சீராகிறது. இதோடு வாழைப்பழம் ப்ரீபயாடிக் ஆக செயல்படுவதால் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, ஒட்டு மொத்த குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com