herzindagi
raw banana recipe at home

Raw Banana kebab : அசைவ உணவுகளை மிஞ்சும் சுவையில், வாழைக்காய் கபாப் ரெசிபி!

சிக்கன், மட்டன் அல்லது சோயாவை வைத்து கபாப் செய்திருப்பீர்கள். ஒரு முறை வாழைக்காயை வைத்து கபாப் செய்து பாருங்கள், இனி அடிக்கடி செய்வீர்கள்…
Editorial
Updated:- 2023-08-03, 14:48 IST

காய்கறி, கீரை போன்றவையும் ஆரோக்கியத்திற்கு அவசியம் தானே! சொல்வது ஈஸி, சாப்பிடுவதும் சாப்பிட வைப்பதும் சற்று கடினம் தான். புரிகிறது! அசைவ உணவு பிரியர்கர்களுக்கு மட்டுமே இந்த மனக்கவலை புரியும். உணவை ரசித்து உண்ணும் நீங்கள் பாக்கியசாலிகள். கவலை, துக்கம், சண்டை மற்றும் மன கவலையை விரட்ட எளிய வழி உணவு. சாப்பிட்டாலும் சரி, நமக்கு பிடித்தவர்களுக்கு சமைத்து பரிமாறினாலும் சரி உணவு ஆத்மார்த்தமான மகிழ்ச்சியை கொடுக்கும். மனதும், வயிறு நிறைந்தால் கவலை எல்லாம் பறந்தோடி விடும்.

ஆனால் வாரத்தின் எல்லா நாட்களிலும் அசைவ உணவுகளை சாப்பிட முடியாது. கவலையை விடுங்க, இன்றைய பதிவில் பகிரப்பட்டுள்ள வாழைக்காய் கபாப் ரெசிபியை நீங்களும் செய்து பாருங்கள். இதன் மணமும் சுவையும் நிச்சயமாக அசைவ உணவை விட தரமாக இருக்கும். இதை டீப் ஃப்ரை செய்யாமல் குறைந்த அளவு எண்ணெய் பயன்படுத்தி ஷாலோ ஃப்ரை செய்து சாப்பிடலாம். வாழைக்காய் கபாப்பின் செய்முறையை இப்போது பார்க்கலாம்.

 

இந்த பதிவும் உதவலாம்: ஐயங்கார் பேக்கரி ஸ்டைல் ரவா கேக், இனி வீட்டிலேயே செய்யலாம்!

 

செய்முறை 

raw banana kebab

  • முதலில் ஒரு பிரஷர் குக்கரில் இரண்டாக நறுக்கிய வாழைக்காயுடன் சிறிதளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். ஒரு விசில் விட்டால் போதுமானது.
  • பின்னர் வாழைக்காயின் தோலை உரித்து, அதை நன்கு மசித்து கொள்ளவும்.
  • இப்போது ஒரு மிக்ஸர் ஜாரில் பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, சோம்பு, இஞ்சி, பூண்டு, சோம்பு, கரம் மசாலா பொடி மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • மசித்த வாழைக்காயுடன் அரைத்த கலவை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
  • மாவுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, கடலை மாவு அல்லது கான்பிளவர் மாவு சேர்த்துக் கொள்ளலாம்.

vazhaikai kabab recipe

  • இதை நன்கு பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி, உங்களுக்கு பிடித்த வடிவத்தில் தட்டி ஷாலோ ட்ரை செய்து கொள்ளலாம்.
  • உங்களிடம் ஸ்கியூவர் குச்சிகள் இருந்தால், அதையும் கபாப் செய்ய பயன்படுத்தலாம். இந்த குச்சிகள் இல்லாதவர்கள் உங்களுக்கு பிடித்தமான வடிவில் வாழைக்காயை தட்டி தோசை கல்லில் சுட்டெடுக்கலாம்.

 

இந்த பதிவும் உதவலாம்: செம டேஸ்ட், வீட்டில் வாழைப்பழம் இருந்தால் இந்த மாதிரி மால்புவா செஞ்சு பாருங்க!

 

இந்த வாழைக்காய் கபாப் ரெசிபியை நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம் 

image source:freepik 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com