herzindagi
rava cake recipe at home

Eggless Rava Cake : ஐயங்கார் பேக்கரி ஸ்டைல் ரவா கேக், இனி வீட்டிலேயே செய்யலாம்!

ஓவன், மைதா, வெள்ளை சர்க்கரை எதுவுமே வேண்டாம். இனி வீட்டிலேயே நல்ல ஸ்பாஞ்சியான ரவா கேக் செய்யலாம்…
Editorial
Updated:- 2023-07-31, 16:49 IST

கேக் அப்படினாலே அது ஆரோக்கியமற்றது என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. ஆனால் இது எல்லா கேக் வகைகளுக்கும் பொருந்தாது. மைதாவிற்கு பதிலாக கோதுமை மாவு அல்லது சிறுதானிய மாவு, வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரை, இது போன்ற மாற்றங்களை செய்தால் போதும், எவ்வித தயக்கமும் இன்றி கேக் சாப்பிடலாம்.

வீட்டில் உள்ள குழந்தைகள் கேக் கேட்டு அடம் பிடித்தால், இனி நீங்களே வீட்டில் செய்து கொடுக்கலாம். ஓவன் இல்லாதவர்களும் கடாய் அல்லது குக்கரை கொண்டு இந்த கேக்கினை செய்ய முடியும். பேக்கிரிகளில் மிகவும் பிரபலமான ரவா கேக் ரெசிபியை இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம். இந்த கேக் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம். 

 

இந்த பதிவும் உதவலாம்: குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை, எல்லோருக்கும் ஏற்ற ஹெல்தி ஸ்னாக்ஸ்!

 

தேவையான பொருட்கள்

rava sweet recipes

  • ரவா - 1 கப்
  • தயிர் - 1/2 கப்
  • நெய் - ¼ கப்
  • நாட்டு சர்க்கரை - ¾ கப்
  • கோதுமை மாவு - ¼ கப் 
  • பால் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன் 
  • பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
  • பேக்கிங் சோடா - ¼ டீஸ்பூன்
  • ஏலக்காய் - 2(விதைகள் மட்டும்)
  • காய்ச்சி ஆற வைத்த பால் - தேவையான அளவு
  • உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை

iyengar style rava cake

  • முதலில் தயிருடன், நெய் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.
  • இப்போது ஒரு மிக்ஸர் ஜாரில் ரவை, நாட்டு சர்க்கரை, கோதுமை மாவு, பால் பவுடர், உப்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து பொடித்து கொள்ளவும்.
  • அரைத்த பொடியை அடித்து வைத்துள்ள நெய் மற்றும் தயிர் கலவையில் சேர்க்கவும்.
  • இதனுடன் காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து கலக்கவும்.
  • பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு திக்கான மாவு தயாரித்து கொள்ளவும்.
  • ஒரு கடாயில் ஸ்டாண்ட் வைத்து மூடி போட்டு 10 நிமிடங்களுக்கு சூடு செய்து கொள்ளவும்.
  • இப்போது ஒரு பேக்கிங் பேன் அல்லது கிண்ணத்தில் எண்ணெய் /நெய் தடவி தயாராக வைத்துள்ள கேக் மாவினை ஊற்றவும்.
  • இதனை சூடாக உள்ள கடாயினுள் வைத்து 40-45 நிமிடங்களுக்கு பேக் செய்து எடுக்கவும்.
  • முழுவதுமாக ஆறிய பின்னர், டீமோல்டு செய்து விரும்பிய வடிவத்தில் வெட்டி பரிமாறவும்.

இந்த பேக்கரி ஸ்டைல் ரவா கேக் ரெசிபியை நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்த பாருங்கள். இனி ஆரோக்கியமான பொருட்களை கொண்டு வீட்டிலேயே சுலபமாக கேக் செய்யலாம்.

 

இந்த பதிவும் உதவலாம்: இப்படி ஜூஸ் போட்டு குடுங்க, யாருமே வேண்டாம்னு சொல்லமாட்டாங்க!

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com