இந்தியாவில் பத்தில் ஒரு நபருக்கு கட்டாயம் தைராய்டு பாதிப்பு ஏற்படுகிறது எனவும் இதில் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. உடலின் வளர்சிதை மாற்றம், தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் போன்றவற்றால் தைராய்டு பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் சிலருக்கு உடல் எடை சட்டென்று அதிகரிக்கும், ஒரு சிலருக்கோ உடல் எடையானது நாளுக்கு நாள் குறைந்துக்கொண்டே போகும். இதைத் தான் ஹைப்போ மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் என்கிறார்கள். இவற்றைக் கட்டுப்படுத்த மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டாலும் உணவு முறையில் சில மாற்றங்களைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க: ஆற்றல் முதல் இளமை தோற்றம் வரை: முளைகட்டிய பாசிப்பயிறின் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
நம்முடைய கழுத்தின் கீழ்ப்பகுதியில் பட்டாம்பூச்சி வடிவில் இருக்கும் தைராய்டு எனும் நாளமில்லா சுரப்பியானது உடலில் தட்ப வெப்பநிலை, இதயத் துடிப்பு மற்றும் வளர்சிதை மாற்றம ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது. அளவுக்கு அதிகமாகும் போது அல்லது குறைவாகும் போதோ தைராய்டு பிரச்சனையை சந்திக்க நேரிடுகிறது. இந்த நேரத்தில் சில உணவு முறைகளைத் தவிர்ப்பது நல்லது.
மேலும் படிக்க: Jowar millet benefits: கூந்தல் ஆரோக்கியம் முதல் செரிமானம் வரை சோளத்தினால் கிடைக்கும் அற்புத நன்மைகள்
வேர்க்கடலையை அதிகளவில் உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது, இதில் உள்ள கோய்ட்ரோஜன்கள் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். வேர்க்கடலையில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் அளவுக்கு அதிமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
முட்டைக்கோஸ் மற்றும் ப்ரோக்கோலி போன்ற இலைக்காய்கறிகளில் காய்ட்ரோஜன் எனும் தனிமம் அதிகளவில் இருக்கிறது. ஒருவேளை உங்களுக்கு தைராய்டு பாதிப்பு இருந்தால் இந்த காய்கறிகள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
சோயா பீன்ஸில் இருக்கும் ஐசோஃப்ளோவன்ஸ் எனப்படும் சில சேர்மங்கள் தைராய்டு பாதிப்பு உள்ளவர்களுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே உங்களது உணவு முறையில் கட்டாயம் சோயா பீன்ஸ்கள் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. பாதாம், வெண்ணெய், இறைச்சி, எண்ணெய் வறுக்கப்படும் அதிக கொழுப்புள்ள உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
மேற்கூறியுள்ள உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்த்துவிடுவது ஒருபுறம் இருந்தாலும், உடலை எப்போதும் ஆற்றலுடன் வைத்திருக்க உடற்பயிற்சி அவசியம். தினமும் ஒரு மணி நேரமாவது ஜாக்கிங், வாக்கிங், ஸ்கிப்பிங் போன்ற கார்டியோ பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. இதோடு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தைராய்டு பாதிப்பு குறித்து மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது.
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com