வார விடுமுறை என்றால் நிச்சயம் பலரது வீடுகளில் சைவ உணவுகள் தான் பிரதானமாக இருக்கும். அதிலும் குழந்தைகள் சிக்கன் தான் வேண்டும் என்று பல வீடுகளில் அடம்பிடிப்பார்கள். இவர்களுக்காகவே ஒரு அரை கிலோவாவது சிக்கன் கட்டாயம் எடுப்பார்கள். அந்தளவிற்கு சிக்கன் சுவை அவர்களைக் கட்டிப்போட்டுள்ளது.
பொதுவாக குழந்தைகள் உள்ள வீடுகளில் காரம் சற்றுக் குறைவாகத் தான் இருக்கும். அது போன்ற ரெசிபிகள் பெரியவர்களுக்கு அவ்வளவாக பிடிக்காது. இந்த நிலையை நீங்கள் ஒருமுறையாவது அனுபவித்திருந்தால் சிக்கனைக் கொண்டு காரசார சுவையுடன் ஒரு ரெசிபி செய்துப் பாருங்கள். அது வேறொன்றும் இல்லை. மிளகாய் வத்தலைக் கொண்டு செய்யப்படும் சில்லி சிக்கன் ப்ரை ரெசிபி தான். எப்படி என தெரிந்துக் கொள்ள வேண்டுமா? இதோ உங்களுக்கான ரெசிபி இங்கே.
மிளகாய் வத்தல் சிக்கன் ப்ரை ரெசிபி:
தேவையான பொருட்கள்:
- சிக்கன் - 1 கிலோ அல்லது உங்களுக்குத் தேவையான அளவு
- வரமிளகாய் - 200 கிராம்.
- நல்லெண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - சுவைக்கு ஏற்ப
மேலும் படிக்க:காரசாரமான காரைக்குடி இறால் மசாலா ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக
செய்முறை:
- காரம் நிறைந்த சிக்கன் ரெசிபி செய்வதற்கு முதலில், சிக்கனை நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கனை வேக வைக்கவும். 5 நிமிடத்தில் கொதி நிலைக்கு வந்தவுடன் அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் விதைகள் நீக்கப்பட்ட மிளகாய் வத்தல் போட்டு நன்கு கிளறிவிடவும்.
- சிக்கன் வேகும் அளவிற்கு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். சில நிமிடங்களுக்குப் பிறகு இதனுடன் மிளகு தூள் சேர்த்துக் கொள்ளவும்.
- தண்ணீர் சுண்ட வற்றும் வரை சிக்கனை அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
- இறுதியாக தாளிப்புக் கரண்டி அல்லது சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, இலவங்கபட்டை, பிரிஞ்சிப் பூ போட்டு தாளித்துக் கொட்டினால் போதும். நல்ல சுவையோடு காரத்திற்குப் பஞ்சம் இல்லாத சிக்கன் ப்ரை ரெசிபி ரெடி.
மேலும் படிக்க: டிபன் பாக்ஸ்க்கு என்ன செய்யணும்னு யோசிக்கிறீங்களா? மசாலா தேங்காய் சாதம் ட்ரை பண்ணுங்க
- இதுபோன்று ஒருமுறையாவது செய்துப் பாருங்க. நிச்சயம் பெரியவர்களுக்குப் பிடித்த ரெசிபிகளில் ஒன்றாக மாறிவிடும். இதை சூடான சாதத்தில் வைத்து கிளறி சாப்பிட்டால் போதும். இதன் சுவையை யாராலும் அடித்துக் கொள்ள முடியாது.
Image credit - freepik
- இதுபோன்று ஒருமுறையாவது செய்துப் பாருங்க. நிச்சயம் பெரியவர்களுக்குப் பிடித்த ரெசிபிகளில் ஒன்றாக மாறிவிடும். இதை சூடான சாதத்தில் வைத்து கிளறி சாப்பிட்டால் போதும். இதன் சுவையை யாராலும் அடித்துக் கொள்ள முடியாது.
Image credit - freepik
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation