Banana Malpua : செம டேஸ்ட், வீட்டில் வாழைப்பழம் இருந்தால் இந்த மாதிரி மால்புவா செஞ்சு பாருங்க!

திடீரென இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆசையாக இருந்தால், டக்குனு 20 நிமிஷத்துல இந்த வாழைப்பழ மால்புவா செஞ்சு சாப்பிடுங்க!

quick banana malpua recipe

வாழைப்பழ மால்புவா : உணவுக்கு பிறகு ஏனோ ஒரு துண்டு கடலை மிட்டாய், ஒரு சிறிய துண்டு வெல்லம் இந்த மாதிரி இனிப்பு சாப்பிட்டால் தான் திருப்தியாக இருக்கும். பெரும்பாலான விழாக்களில் உணவுக்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இனிப்புகளுக்கும் வழங்கப்படுகிறது. அதில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு வகையை இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம். மால்புவா என்பது ஒரு வகை பேன் கேக் ஆகும். இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு ஸ்வீட் ரெசிபி.

இந்தியாவில் மட்டுமல்லாமல் வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் மால்புவா ஒரு பிரபல இனிப்பு உணவாக இருந்து வருகிறது. இதை ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்வதற்கான முறையை தெரிந்துகொள்வோம். இதை பொரிக்க விருப்பம் இல்லாதவர்கள் தோசைக்கல்லில் சிறிய பேன் கேக்குகளாகவும் செய்து கொடுக்கலாம்.

தேவையான பொருட்கள்

banana pancake recipe

  • பால் - 2 கப்
  • கோதுமை மாவு - 1 கப்
  • வாழைப்பழம் - 2
  • ஏலக்காய் பொடி - ½ டீஸ்பூன்
  • ரவா - ½ கப்
  • நாட்டு சர்க்கரை - ½ கப்

செய்முறை

malpua recipe

  • மால்புவா செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை சலித்து எடுத்துக் கொள்ளவும்.
  • இரண்டு வாழைப் பழங்களை நன்கு மசித்து தனியாக வைத்துக் கொள்ளவும். இதற்கு நன்கு பழுத்த வாழைப்பழங்களையும் பயன்படுத்தலாம்.
  • இப்போது மசித்த வாழைப்பழத்துடன் ரவை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறவும்.
  • இனிப்பு சுவைக்கு ஏற்ப நாட்டு சர்க்கரை அல்லது பொடித்த வெல்லம் சேர்த்து நன்றாக கிளறவும்.
  • இதனுடன் சலித்து வைத்துள்ள கோதுமை மாவை சேர்த்து கலக்கவும்.
  • இதில் கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்த்து தோசை மாவு மாவு தயார் செய்து கொள்ளவும்.
  • இதனை ஒரு 10-15 நிமிடத்திற்கு ஊற வைக்கவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடாக்கவும்.
  • தயாராக வைத்துள்ள மால்புவா மாவில் இருந்து ஒரு சிறிய பகுதியை எடுத்து சூடான எண்ணெயில் ஊற்றவும்.
  • இருபுறமும் நன்கு வேகும் வரை பொரித்தெடுக்கவும். பின்னர் ஒரு தட்டிற்கு மாற்றி வைத்து, மால்புவா மீது சுத்தமான நெய்யை ஊற்றவும்.

இந்த பதிவும் உதவலாம்: குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை, எல்லோருக்கும் ஏற்ற ஹெல்தி ஸ்னாக்ஸ்!


இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP