காரசாரமான காரைக்குடி இறால் மசாலா ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக

காரைக்குடி ஸ்பெஷல் இறால் மசாலா ரெசிபியை வீட்டிலேயே எப்படி சுலபமாக செய்யலாம்? என்பது குறித்த டிப்ஸ் உங்களுக்காக
image

காரைக்குடி சமையல் என்றாலே காரத்திற்கு பஞ்சம் இருக்காது. சைவ சாப்பாடு முதல் அசைவ சாப்பாடு வரை ருசி வேற செலவில் இருக்கும். காரைக்குடி சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி போன்ற வரிசையில் செட்டிநாட்டு சமையலில் மற்றொரு ருசியான ரெசிபிகளில் ஒன்றாக உள்ளது காரைக்குடி இறால் மசாலா. மீன் பிரியர்கள் எப்போதுமே தவிர்க்காத இந்த ரெசிபியை எப்படி வீட்டிலேயே எளிமையாக செய்யலாம்? என்பது குறித்த டிப்ஸ் உங்களுக்காக.

காரைக்குடி இறால் மசாலா:

தேவையான பொருட்கள்:

  • இறால் - அரை கிலோ
  • எண்ணெய் - சிறிதளவு
  • தக்காளி - 3
  • வெங்காயம் - 3
  • ஏலக்காய், இலவங்க பட்டை - சிறிதளவு
  • உப்பு - சுவைக்கு ஏற்ப
  • கறிவேப்பிலை - தாளிப்பதற்கு ஏற்ப
  • இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
  • மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
  • சீரகம் - 1 தேக்கரண்டி
  • மிளகாய் வத்தல் - 5
  • கொத்தமல்லி - 1 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - சிறிதளவு

காரைக்குடி ஸ்பெஷல் இறால் மசாலா செய்முறை

  • ஹோட்டல் ஸ்டைலில் இறால் மசாலா செய்வதற்கு முதலில், இறாலில் உள்ள நரம்புகளை நீக்கி நன்கு சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் ஒரு கடாயில் சோம்பு, மிளகு, சீரகம், மிளகாய் வத்தல், கொத்தமல்லி போன்றவற்றை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
  • சூடு ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும். நன்கு அரைக்க முடியவில்லையென்றால் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இப்போது இறால் மசாலா செய்வதற்கான மசாலா ரெடி.

மேலும் படிக்க:ஆரோக்கியமான முருங்கை இலை துவையல் ரெசிபி டிப்ஸ் இதோ

  • இதையடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, இலவங்கப்பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும. பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • இதனுடன் தக்காளி சேர்த்து குறைவான வெப்பத்தில் ஒரு 10 நிமிடங்கள் நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  • நன்கு வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.
  • இறுதியாக இறாலை சேர்த்து ஒரு 10 முதல் 15 நிமிடங்கள் வதக்கி எடுத்தால் போதும். சுவையான காரைக்குடி ஸ்பெஷல் இறால் கிரேவி ரெடி.

Image credit - Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP