இனிப்புகள் என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. லட்டு, ஜிலேபி போன்ற பல ரெசிபிகள் இருந்தாலும் ஒவ்வொரு ஊர்களுக்கும் ஒவ்வொரு விதமான இனிப்பு பலகாரங்கள் பிரபலமானதாக இருக்கும். அரிசி மாவு, முட்டை, சர்க்கரை கொண்டு செய்யப்படும் பேமஸான பலகாரம் கஸ்ரா, கீழக்கரை துதல் அல்வா, தோதல் அல்வா என பல வகையான அல்வா வகைகள் இராமநாதபுரத்தில் பேமஸாக இருந்து வருகிறது. இந்த வரிசையில் இன்றைக்கு தனிச்சுவையுடன் மிகவும் பேமஸான பனை அல்வா ரெசிபி குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
ராமநாடு ஸ்பெஷல் பனை அல்வா:
தேவையான பொருட்கள்:
- பனை பழம் - 1
- நெய் - 2 டீஸ்பூன்
- ஏலக்காய் - 2
- பனை வெல்லம் - 50 கிராம்
- முந்திரி - 4
- பாதாம் - 4
மேலும் படிக்க:சதுர்த்தி நாளில் விநாயகருக்கு விருந்து படைக்க இந்த ரெசிபிகளை ட்ரை பண்ணுங்க
பனை அல்வா செய்முறை:
- ராம்நாடு ஸ்பெஷல் பனம் பழம் செய்வதற்கு முதலில், இப்பழத்தின் சாறை தனியாக பிழிந்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் ஒரு கடாயை சூடாக்கி பிழிந்து வைத்துள்ள பனம்பழத்தின் சாறு மற்றும் பனை வெல்ல கரைசலை சேர்த்து மிதமான சூட்டில் அடி பிடிக்காமல் நன்கு கிளற வேண்டும்.
- இந்த கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக நெய் ஊற்றி கடாயில் அல்வா ஒட்டாத அளவிற்கு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அல்வா பதத்திற்கு வரும் வரை கிளற வேண்டும். அதாவது நெய் பிரிந்து மேலே வரும் வரை நன்கு கிளற வேண்டும்.
- இறுதியாக முந்திரி மற்றும் பாதாமை பொன்னிறமாக வறுத்து இதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.
- ஏலக்காயை முழுவதுமாக சேர்த்தால் குழந்தைகள் வெளியில் எடுத்து போட்டு விடுவார்கள். எனவே ஏலக்காயை நன்கு பொடியாக்கிக் கொள்ளவும். ஏலக்காயை மிக்ஸியில் அரைக்கிறீர்கள் என்றால் கொஞ்சம் சீனி அரைத்துப் பாருங்கள். நைஸாக அரைத்துவிடும்.
மேலும் படிக்க: டிபன் பாக்ஸ்க்கு என்ன செய்யணும்னு யோசிக்கிறீங்களா? மசாலா தேங்காய் சாதம் ட்ரை பண்ணுங்க
- கடாயில் கிளறி வைத்துள்ள பனை அல்வாவுடன் முந்திரி மற்றும் பாதாமை சேர்த்தது போன்று பொடியாக்கி வைத்துள்ள ஏலக்காயையும் சேர்த்துக் கொண்டால் போதும். ருசியான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த பனைபழம் அல்வா ரெடி.
இராம்நாடு ஸ்பெஷல்:
பொதுவாக ராமநாதபுர மாவட்டத்தில் விவசாயம் அவ்வளவாக இல்லை. பனை மரங்கள் அதிகம் உள்ளதால் நொங்கு, கருப்பட்டி மற்றும் பனை வெல்லம் தயாரித்தல் பனை ஓலை நெய்தல் போன்ற பனை சார்ந்த தொழில்கள் தான் பிரதானமாக இருந்து வருகிறது.
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation