மாதவிடாய் வலி நீக்குவது முதல் பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கருப்பு உளுந்து கஞ்சி

நம்முடைய முன்னோர்கள் காலம் தொட்டு பெண்கள் பூப்பந்தடைந்த நாள் முதல் கருப்பு உளுந்துக் கொண்டு செய்யப்படும் கஞ்சி, களி போன்றவற்றை உபயோகித்து வந்துள்ளனர்.
image

பண்டைய காலம் முதல் நாம் பின்பற்றிய அனைத்து உணவுப்பொருட்களிலும் ஒவ்வொரு விதமான ஆரோக்கிய நன்மைகள் புதைந்துள்ளது. குறிப்பாக வீட்டைக் காக்கும் பெண்களுக்காகவே பிரத்யேக உணவு முறைகள் இருக்கிறது. இதன் காரணமாக தான் அந்தக் காலத்தில் எவ்வித வலியும் இல்லாமல் கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆகியுள்ளது. அந்த உணவு வேறொன்றும் இல்லை. பெண்களின் உடல் வலிமையையும், எலும்பு ஆரோக்கியத்தையும் காக்கும் கருப்பு உளுந்து கொண்டு செய்யப்படும் கஞ்சி மற்றும் களி தான். இன்றைக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கருப்பு உளுந்தங்கஞ்சி செய்யும் முறை மற்றும் அதன் பலன்கள் குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம்.

கருப்பு உளுந்து கஞ்சியின் நன்மைகள்:

  • உணவு முறையில் கருப்பு உளுந்து சேர்த்துக் கொள்வது உடலுக்குக் குளிர்ச்சியை அளிக்கும். உடல் சூடு காரணமாக பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், மாதவிடாய் வலி போன்ற வலியைக் குறைக்க உதவுகிறது.
  • கருப்பு உளுந்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலில் இருக்கும் நச்சுத் தன்மையை நீக்க உதவுவதோடு, செரிமான அமைப்பை சீராக்குகிறது. மலச்சிக்கல் வராமலும் தடுக்க உதவுகிறது.
  • உளுந்து பருப்பில் அதிகளவு கால்சியம் உள்ளதால் பெண்களுக்கு எலும்புகளை வலுவாக்குகிறது. தொடர்ச்சியாக இவற்றை உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல் சோர்வை நீக்குவது முதல் குழந்தைப் பிறப்பின் போது எலும்புகளை வலுவாக்கவும் உதவுகிறது.

பெண்களுக்கு வலுசேர்க்கும் கருப்பு உளுந்தங்கஞ்சி:

தேவையான பொருட்கள்:

  • கருப்பு உளுந்து - 1 கப்
  • தேங்காய் துருவல் - அரை கப்
  • பனை வெல்லம் - அரை கப்
  • தண்ணீர் - தேவையான அளவு
  • உப்பு - ஒரு சிட்டிகை

கருப்பு உளுந்து கஞ்சி செய்முறை:

பெண்களுக்கு வலுசேர்க்கும் கருப்பு உளுந்து கஞ்சி செய்வதற்கு முதலில், கருப்பு உளுந்தை லேசாக வறுத்து ஊற வைக்க வேண்டும். பின்னர் கஞ்சி பதம் வரும் வரை நன்கு வேக வைத்துக்கொண்டு அதனுடன் தேங்காய் துருவல் மற்றும் பனை வெல்லம். போன்றவற்றை சேர்த்துக் கொள்ளவும். தற்போது சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த கருப்பு உளுந்து கஞ்சி ரெடி. இதை சாப்பிடுவதற்கு முன்னதாக சுத்தமான நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்வது நல்லது. உடலுக்கு அதீத வலுசேர்க்கும்


செய்முறை 2

  • கருப்பு உளுந்து வேக வைத்து செய்வதற்குப் பதிலாக மாவாக அரைத்தும் இந்த ரெசிபி செய்யலாம். முதலில் கடாயை லேசாக சூடாக்கி கருப்பு உளுந்தை ஒரு 5 நிமிடத்திற்கு வறுத்துக் கொள்ளவும்.
  • சூடு ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் போட்டு கொர கொரப்பாக அரைக்கவும். இதையடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அரைத்து வைத்துள்ள உளுந்தம் பொடியை சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க:குழந்தை பிறந்து 6 மாத காலம் முடிவடைந்துவிட்டதா? இந்த உணவுகளைக் கட்டாயம் கொடுத்திடுங்க

ஓரளவிற்கு கட்டிப் பதத்திற்கு வந்தவுடன் பொடியாக்கிய கருப்பட்டி மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும். சுவைக்காக ஏலக்காய் பொடியை சேர்த்துக் கொள்ளவும்.

மேலும் படிக்க:பெண்களுக்கு ஏற்படும் இரும்புச்சத்து குறைப்படுகளை போக்க தினசரி செய்ய வேண்டியவை

இறுதியாக குழந்தைகள் விரும்பும் சாப்பிடுவதற்கு ஏற்றவாறு நெய்யில் முந்திரி, பாதாம் போன்றவற்றை வறுத்துக் கொட்டினால் போதும். சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த கருப்பு உளுந்து கஞ்சி ரெடி.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP