herzindagi
image

ஆரோக்கியமான முருங்கை இலை துவையல் ரெசிபி டிப்ஸ் இதோ

சமைப்பதற்கு குறைவான நேரமே இருக்கிறது என்று கவலைப்பட வேண்டும். பல்வேறு அத்தியாவசிய ஊ்ட்டச்சத்துக்களைக் கொண்டுள்ள முருங்கை இலை துவையலை சட்டென்று செய்துக் கொடுங்க. குழம்பு கூட தேவையிருக்காது வெறும் சாதத்தில் நெய் ஊற்றி கிளறி சாப்பிட்டாலே போதும்.
Editorial
Updated:- 2025-08-13, 13:35 IST

இன்றைய சூழலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பரபரப்பான சூழலில் ஓடிக்கொண்டிருக்கிறோம். சமைப்பதற்குக் கூட பெண்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. ஆனாலும் சாப்பிட வேண்டும் என்பதற்காகக் கிடைத்த காய்கறிகளை வைத்து செய்துவிடுகிறோம். குறைவான நேரத்தில் ஊட்டச்சத்துள்ள உணவுகள் தயார் செய்ய வேண்டும் என்றால் ஒருமுறையாவது முருங்கை இலையைக் கொண்டு துவையல் செய்து பாருங்க. இதோ அதற்கான ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக

கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறத்தில் உள்ள சில இடங்களில் மிகவும் எளிமையாகவும் விலையில்லாமல் கிடைக்கும் முருங்கை கீரையை வைத்து இதுவரை பொரியல் செய்திருப்பீர்கள். ஒருமுறையாவது முருங்கை இலை துவையல் செய்துப் பாருங்கள். நிச்சயம் சுவையோடு ஆரோக்கியத்தையும் எளிதில் பெறலாம். 

மேலும் படிக்க: ஆட்டுக்கறியை மென்மையாகவும், விரைவாகவும் சமைக்க... இந்த குறிப்புகளைப் பின்பற்றுங்கள்..!


ஊட்டச்சத்துள்ள முருங்கை இலை துவையல்:

  • முருங்கை இலை - ஒரு கப்
  • எண்ணெய் - சிறிதளவு
  • உளுந்து - 2 டீஸ்பூன்
  • பூண்டு - 5 பல்
  • பச்சை மிளகாய் - 3
  • மிளகாய் வத்தல் - 2
  • சின்ன வெங்காயம் - 10
  • இஞ்சி - சிறிதளவு
  • உப்பு- தேவைக்கு ஏற்ப
  • புளி - சிறிதளவு
  • கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு
  • தேங்காய் துருவல் - அரை கப்


முருங்கை இலை துவையல்:

  • முருங்கை இலையைக் கொண்டு துவையல் செய்வதற்கு முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
  • அதனுடன் உளுந்து, பூண்டு, பச்சை மிளகாய், மிளகாய் வத்தல், சின்ன வெங்காயம் போன்றவற்றைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் இஞ்சி, புளி, கொத்தமல்லி இலை, தேங்காய் துருவல் மற்றும் முருங்கை இலையைச் சேர்த்து ஒரு 5 நிமிடங்களுக்கு வதக்கவும்.
  • இறுதியாக ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்தால் போதும். சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த முருங்கை இலை துவையல் கீரை ரெடி.

மேலும் படிக்க: ஆடி ஸ்பெஷல் கருப்பு கவுனி அரிசி பாயாசம்; சுவையான ஈஸி ரெசிபி இதோ

 

முருங்கையின் அற்புத நன்மைகள்:

“முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போக மாட்டான்” என்பதற்கு ஏற்ப முருங்கை யைத் தினமும் உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது வயதான காலத்திலும் யாருடைய துணையின்றி இருக்க முடியுமாம். அந்தளவிற்கு நார்ச்சத்துக்கள், இரும்புச்சத்துக்கள் போன்ற பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. வாரத்திற்கு ஒருமுறையாவது உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது மூளையின் ஆரோக்கியம் அதிகரிக்கும். மேலும் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதோடு புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கிறது.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com