herzindagi
image

ஆரோக்கியம் நிறைந்த பச்சை பயறு புலாவ்; சுலபமாக செய்யும் முறை உங்களுக்காக

சாப்பிடக்கூடிய உணவுகள் சுவையுடன் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்றால் ஒருமுறையாவது பச்சை பயறைப் பயன்படுத்தி புலாவ் செய்து சாப்பிடுங்க.  
Editorial
Updated:- 2025-09-22, 23:25 IST

இன்றைய உணவு பழக்கவழக்கம் என்பது முற்றிலும் மாறிவிட்டது. அவசர கதியில் கிடைத்த உணவுகளைச் சாப்பிட்டு விட்டு செல்கிறோம். நிச்சயம் நாம் சாப்பிடக்கூடிய ஒவ்வொரு உணவுகளிலும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளதா? என்பது கேள்விக்குறி தான். இதற்கு என்ன செய்ய வேண்டும்? என்னென்ன உணவுகளைச் சாப்பிடலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்படின்னா இந்த பச்சை பயறு கொண்டு செய்யப்படும்.ரெசிபியை ட்ரை பண்ணுங்கள். இதில் உள்ள புரத சத்துக்கள் உடலுக்கு அதிக ஆரோக்கியத்தைத் தருவதோடு சுவையையும் அதிகளவில் வழங்கக்கூடும்.

மேலும் படிக்க: ஆரோக்கியம் நிறைந்த வாழைத்தண்டு பஜ்ஜி; சுலபமான முறையில் செய்யும் முறை இதோ!

பச்சை பயறு புலாவ் ரெசிபி:

  • பாஸ்மதி அரிசி - 2 கப்
  • பச்சை பயறு - 2 கப்
  • உப்பு - சுவைக்கு ஏற்ப
  • பெரிய வெங்காயம் - 1
  • தக்காளி - 1
  • கொத்தமல்லி - ஒரு கொத்து
  • பச்சை மிளகாய் - 4
  • இஞ்சி - சிறிதளவு
  • சீரகம்- 1 டேபிள் ஸ்பூன்
  • தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
  • நெய் - 4 டேபிள் ஸ்பூன்
  • வெந்தயம் - 2 டேபிள் ஸ்பூன்
  • பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், சோம்பு - தேவையான அளவு

மேலும் படிக்க: காரசாரமாகவும் ருசியாகவும் மசால் பொடி செய்யணுமா? இந்த பொருட்களையெல்லாம் மறக்காமல் சேர்த்திடுங்க!

செய்முறை:

  • பச்சை பயறு புலாவ் செய்வதற்கு முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் பச்சை பயறு எடுத்துக் கொண்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
  • இதையடுத்து புலாவ் செய்வதற்கான பாஸ்பதி அரிசியை 10 நிமிடங்கள் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
  • பச்சை பயறு மற்றும் பாஸ்பதி அரிசி ஊறிக்கொண்டு வேளையில், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சீரகம் போன்றவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலையும் சேர்த்து அரைத்துக் கொள்வது நல்லது.

மேலும் படிக்க: ஆரோக்கியம், சுவை நிறைந்த பாதாம் அல்வா;  ஒரு முறை இப்படி செய்துப் பாருங்கள் !

 

 

  • பின்னர் குக்கரை மிதமான சூட்டில் வைத்து நெய் ஊற்றவும். கொஞ்சம் சூடேறியதும் சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போன்றவற்றை சேர்க்கவும்.
  • ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு இதனுடன் நறுக்கிய வெங்காயத்தை உடன் சேர்த்துக் கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • இதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் துருவல் மற்றும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து கிளறவும். 5 நிமிடங்களுக்குப் பிறகு ஊறவைத்துள்ள அரிசி மற்றும் பச்சை பயறு சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
  • அரிசிக்கு ஏற்ப தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளவும். 2 அல்லது 3 விசில்கள் வந்தவுடன் அடுப்பை அணைத்தால் போதும். சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த பச்சை பயறு புலாவ் ரெடி.

Image Credit - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com