பேக்கரி ஸ்டைலில் சுவையான வாழைப்பழ கேக்; சிம்பிள் ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள கேக் செய்ய வேண்டும் என்றால், ஒருமுறையாவது வாழைப்பழத்தைக் கொண்டு கேக் ரெசிபி ட்ரை பண்ணுங்க
image

பள்ளி முடித்துவிட்டு வீடு திரும்பியதும் வீட்டில் என்ன ஸ்நாக்ஸ் இருக்குமா? என உங்களது குழந்தைகள் கேட்கிறீர்களா? அப்படியென்றால் ஒருமுறையாவது அவர்கள் எப்போதும் விரும்பி சாப்பிடக்கூடிய கேக்குகளை ட்ரை பண்ணுங்க. வழக்கம் போன்று மைதா மாவு மற்றும் முட்டைக் கொண்டு கேக் செய்வதற்குப் பதிலாக ஒருமுறையாவது இதனுடன் சேர்த்து ஊட்டச்சத்துள்ள வாழைப்பழங்களைக் கொண்டு கேக் செய்துக் கொடுங்க. இதுவரை இந்த கேக் ரெசிபிகள் செய்தது இல்லையென்றால் இதோ உங்களுக்கான ரெசிபி டிப்ஸ் இங்கே.

குழந்தைகள் விரும்பும் கேக் ரெசிபி:

தேவையான பொருட்கள்:

  • சீனி - அரை கப்
  • வாழைப்பழம் - 2
  • மைதா மாவு - ஒரு கப்
  • வெண்ணிலா எசென்ஸ் - சிறிதளவு
  • தண்ணீர் - தேவையான அளவு
  • சர்க்கரை - ஒரு கப்
  • பேக்கிங் சோடா - சிறிதளவு
  • எண்ணெய் - சிறிதளவு

cake recipe tips

வாழைப்பழ கேக் செய்முறை:

  • சுவையான வாழைப்பழ கேக் செய்வதற்கு முதலில் பெரிய அளவிலான வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ளவும். பின்னர் இதனுடன் 2 முட்டையை சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.
  • இதனுடன் அரை கப் அளவிற்கு எண்ணெய் ஊற்றி அரை கப் அளவிற்கு சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.

மேலும் படிக்க:காரசாரமான காரைக்குடி இறால் மசாலா ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக

  • இதையடுத்து அரை டீஸ்பூன் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்துக் கொண்டு பின்னதாக சர்க்கரை கேரமல் சிரப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • இந்த கலவையுடன் ஒரு கப் மைதா மாவு மற்றும் சிறிதளவு பேக்கிங் சோடா கலந்துக் கொண்டால் போதும். வாழைப்பழ கேக் செய்வதற்கான கலவை ரெடி.
  • பின்னர் இந்த கலவையை ஒரு பவுலில் மாற்றிக் கொண்டு மைக்ரோஓவனில் வேக வைக்கலாம். ஒருவேளை மைக்ரோஓவன் இல்லையென்றால் வீட்டில் உள்ள குக்கரை வைத்து கேக் செய்யலாம்.
  • குக்கரை மிதமான சூட்டில் வைத்து ஒரு 45 நிமிடங்களுக்கு வேக வைத்து எடுத்தால் போதும். கேக் ரெடி. சூடு ஆறியவுடன் கத்தியால் சிறிய சிறிய பீஸ்களாக வெட்டி எடுத்தால் போதும் சுவையான மற்றும் குழந்தைகள் விரும்பும் வாழைப்பழ கேக் ரெடி.

மேலும் படிக்க:வெறும் 20 நிமிடங்களில் சுவையான சோயா கட்லெட்; ரெசிபி டிப்ஸ் இதோ

சர்க்கரை கேரமல் செய்முறை:

கேக்கிற்கு அதிக சுவையைக் கொடுக்கும் கேரமல் செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து கிளறி விட்டால் போதும். சர்க்கரை கேரமல் ரெடி.

Image credit - Pexels

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP