விடுமுறை தினத்தில் அல்லது பள்ளி முடித்து விட்டு வீடு திரும்பும் குழந்தைகளுக்கு ஏதாவது வெரைட்டியான ரெசிபி செய்ய வேண்டும் என்ற ப்ளாண் இருக்கா. என்ன பண்ணலாம் என்று கூகுளில் தேடுதலில் உள்ள பெற்றோர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியென்றால் குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடக்கூடிய பாஸ்தாவை வழக்கமாக இல்லாமல் மாற்றுச் சுவையுடன் செய்துக் கொடுக்கவும். அதற்கு சிறந்த தேர்வாக உள்ளது பொரித்த தக்காளி பூண்டு பாஸ்தா ரெடி பண்ணுங்க. இதோ அதற்கான ரெசிபி டிப்ஸ் இங்கே.
பொரித்த தக்காளி பூண்டு பாஸ்தா:
நாவூறும் சுவையில் பாஸ்தா செய்ய வேண்டும் என்றால் முதலில் அதற்குத் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தேவையான பொருட்கள்:
- பாஸ்தா - 1 கப்
- தக்காளி - 2
- பூண்டு - 10 பற்கள்
- பாலக்கீரை - சிறிதளவு
- மிளகுத்தூள்- சிறிதளவு
- பாஸ்தா மிக்ஸ் - 1 டீஸ்பூன்
- பனீர் - 50 கிராம்
- கஸ்தூரி மேத்தி - சிறிதளவு
மேலும் படிக்க:காரசாரமான மிளகாய் வத்தல் சிக்கன் ப்ரை ரெசிபி டிப்ஸ் இங்கே.
செய்முறை:
- பொரித்த தக்காளி பூண்டு பாஸ்தா செய்வதற்கு முதலில் அனைத்து பொருட்களையும் தயார் நிலையில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- இதையடுத்து தக்காளி வட்ட வடிவில் நைஸாக நறுக்கிக்கொள்ளவும். பூண்டு பற்களின் தோலை உரித்து வைத்துக் கொள்ளவும்.
- தோசைக்கல்லை சூடேற்றி சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி வெட்டி வைத்துள்ள தக்காளி மற்றும் பூண்டு சேர்த்து லேசாக வறுக்கவும். அதன் மேல் சிறிதளவு பாஸ்தா மிக்ஸ் பொடி அல்லது மிளகுத்தூள் சேர்த்தால் சுவை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.
- தக்காளி மற்றும் பூண்டு சூடு ஆறியதும் அதனுடன் சிறிதளவு பனீர் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி பாஸ்தாவை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். தற்போது பாஸ்தா செய்வதற்கான அனைத்துப் பொருட்களும் தயார் நிலையில் உள்ளது.
- பின்னர் ஒரு கடாயை சூடேற்றி அரைத்து வைத்துள்ள தக்காளி, பூண்டு மற்றும் பனீர் கலவையை சேர்த்து வதக்கவும். இதனுடன் சிறிதளவு பாலக்கீரை அல்லது உங்களிடம் உள்ள கீரையையும் சேர்த்து சுண்டும் வரை வதக்கவும்.
- ஒரு 5 நிமிடங்களுக்குப் பின்னதாக இந்த கலவையுடன் வேக வைத்து எடுத்து வைத்துள்ள பாஸ்தாவையும் சேர்த்து சுண்ட வதக்கி விட்டு இறக்கினால் போதும். சுவையான தக்காளி பூண்டு பாஸ்தா ரெடி.
மேலும் படிக்க:உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் வாழைத்தண்டு பொரியல். சட்டுன்னு செய்ய இந்த டிப்ஸ் போதும்!
ஆரம்பத்தில் சுவை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். குழந்தைகள் விரும்பவில்லையென்றால் தக்காளி சாஸ் சேர்த்துக் கொடுத்தால் நிச்சயம் சாப்பிடுவார்கள். இந்த ரெசிபி தற்போது சோசியல் மீடியாவில் டிரெண்டிங்கில் உள்ளது. வீக் என்டிற்கு ஏற்ற டிஸ், பார்க்கவே நாவில் எச்சி ஊறுகிறது, ஹெல்த்தியான டிஸ் என்பது போன்ற கருத்துக்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
Image credit - Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation