herzindagi
image

தீபாவளிக்கு ஸ்பெஷல் மோதிசூர் லட்டு; எளிமையாக செய்யும் வழிமுறை இங்கே!

தீபாவளிக்கு ஆரஞ்சு நிற வண்ணம் கொண்ட மோதிசூர் லட்டு செய்ய வேண்டும் என்றால் இந்த டிப்ஸ்களைக் கட்டாயம் பின்பற்றுங்கள்.
Editorial
Updated:- 2025-10-19, 22:56 IST

தீபாவளி திருநாளில் உங்கள் குழந்தைகளுக்கு குளோப் ஜாமூன் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். ஒரு சிலர் ரவா லட்டு,அதிரசம், லட்டு போன்ற ரெசிபிகளை செய்வோம். மஞ்சள் நிற லட்டுகளை விட தற்போது குழந்தைகளுக்கு ஆரஞ்சு நிறம் கொண்ட மோதிசூர் லட்டுகளின் மீது அதீத ஆர்வம் காட்டுகின்றனர். இந்த லட்டை வீட்டிலேயே எளிமையாக செய்ய முடியும். இதோ அதற்கான எளிய செய்முறை விளக்கம் இங்கே.

மேலும் படிக்க: Diwali Special: தீபாவளிக்கு ருசியான பூசணிக்காய் பர்பி தயார் செய்யலாம் வாங்க!

தித்திக்கும் மோதிசூர் லட்டு:

தேவையான பொருட்கள்:

  • கடலை மாவு - 200 கிராம்
  • ஆரஞ்சு நிறம் கொண்ட கேசரி பவுடர் - சிறிதளவு
  • எண்ணெய் - தேவையான அளவு
  • சீனி - 250 கிராம்
  • நெய் - 4 தேக்கரண்டி
  • ஏலக்காய் - சிறிதளவு
  • முந்திரி பருப்பு - 15

மோதிசூர் லட்டு செய்முறை:

  • தீபாவளிக்கு ஸ்பெஷலான மோதிசூர் லட்டு செய்ய வேண்டும் என்றால் முதலில், ஒரு பெரிய பவுலில் கடலை மாவை எடுத்துக் கொள்ளவும்.
  • இந்த கடலை மாவுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் பிசைந்துக் கொள்ளவும். இதனுடன் கொஞ்சமாக ஆரஞ்சு கலர் கேசரி பவுடரை சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும். தற்போது பூந்தி செய்வதற்கான கலவை ரெடி.
  • இதையடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இந்த கலவை பூந்தியாக பொரித்து எடுக்கவும்.

மேலும் படிக்க: Diwali 2025: தீபாவளிக்கு கன்னியாகுமரி ஸ்பெஷல் முந்திரி கொத்து ரெசிபி செய்யலாம் வாங்க!

  •  பின்னர் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து பாகு காய்ச்சவும்.
  • சர்க்கரை பாகு வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் போது பொரித்த பூந்தி, நெய், முந்திரி பருப்பு மற்றும் ஏலக்காய் தூள் நன்கு கிளற வேண்டும். தற்போது ஆரஞ்சு நிறம் கொண்ட பூந்தி ரெடியாகிவிட்டது.
  • இறுதியில் கை சூடு பொறுக்கும் அளவிற்கு தயார் செய்து வைத்துள்ள பூந்தியை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்தால் போதும். சுவையான மோதிசூர் லட்டு ரெடி.

மேலும் படிக்க: தீபாவளி ஸ்பெஷல்: இனி முறுக்கு மாவு கடைகளில் வாங்க வேண்டாம்; வீட்டிலேயே இப்படி தயார் செய்யுங்க!

அப்புறம் என்ன? மேற்கூறிய முறைகளில் மிகவும் எளிமையான முறையில் குழந்தைகள் விரும்பக்கூடிய மோதிசூர் லட்டு செய்துப்பாருங்கள். தீபாவளிக்குத் தான் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களது வீட்டில் நடக்கும் எவ்வித சுப நிகழ்ச்சிகளுக்கும் இந்த சுவையான லட்டை தயார் செய்யலாம்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com