herzindagi
image

Diwali 2025: தீபாவளிக்கு கன்னியாகுமரி ஸ்பெஷல் முந்திரி கொத்து ரெசிபி செய்யலாம் வாங்க!

தீபாவளிக்கு சுவையான முந்திரி கொத்து செய்யலாம் வாங்க!
Editorial
Updated:- 2025-10-18, 00:37 IST

தீப ஒளி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் மட்டும் போதுமா? மனது நிறைந்தால் மட்டும் போதுமா? தீபாவளிக்கு நம்முடைய வயிறும் மனதார நிரம்ப வேண்டும் அல்லவா? அப்படியென்றால் வழக்கமாக செய்யும் முறுக்கு, அதிரசம், குளோப் ஜாமூன் போன்ற ரெசிபிகள் ஒருபுறம் இருந்தாலும் கொஞ்சம் வித்தியாசமாக ஒருமுறையாவது கன்னியாகுமரி ஸ்பெஷல் முந்திரி கொத்து செய்துப் பாருங்கள். இதுவரை செய்தது இல்லையென்றால் இந்த ரெசிபி டிப்ஸ்களைப் பின்பற்ற மறந்துவிடாதீர்கள்.

மேலும் படிக்க: தீபாவளி ஸ்பெஷல்: இனி முறுக்கு மாவு கடைகளில் வாங்க வேண்டாம்; வீட்டிலேயே இப்படி தயார் செய்யுங்க!

தீபாவளி ஸ்பெஷல் முந்திரி கொத்து:

தேவையான பொருட்கள்:

  • பச்சை பயறு - 2 கப்
  • எள்ளு - 1 டேபிள் ஸ்பூன்
  • தேங்காய் துருவல் - 1 கப்
  • வெல்லம் - கால் கப்
  • மஞ்சள் தூள் - சிறிதளவு
  • பச்சரிசி மாவு - அரைகப்
  • மைதா - கால் கப்
  • உப்பு - சிறிதளவு
  • தண்ணீர்- தேவைக்கு ஏற்ப
  • எண்ணெய் - பொரிப்பதற்கு ஏற்ப

முந்திரி கொத்து செய்முறை:

  • கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய பலகாரங்களில் ஒன்றான முந்திரி கொத்து செய்வதற்கு முதலில், ஒரு கடாயை சூடேற்றி, பச்சை பயறை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
  • பின்னர் எள்ளை வறுக்க வேண்டும். .இதையடுத்து கடாயை சூடாக்கி அதில் துருவிய தேங்காயை வறுத்து கொஞ்சம் சூடு ஆற விடவும்.
  • இதன் பின்னதாக பொரித்த பச்சை பயறு, எள் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொண்டு ஒரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ள வேண்டும்.
  • இதே போன்று வறுத்து வைத்துள்ள தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

  • இதையடுத்து ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பச்சை பயறு மற்றும் தேங்காய் துருவல் போன்றவற்றைக் கலந்துக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் கால் கப் வெல்லத்தை சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் அரை கப் நீரை ஊற்றி பாகு காய்ச்ச வேண்டும்.
  • சர்க்கரை பாகு கம்பி பதத்திற்கு வரும் போது இறக்கி விடவும். பின்னர் கொஞ்சம் சூடாக இருக்கும் போதே அரைத்து வைத்துள்ள பச்சை பயறு கலவையைச் சேர்த்து கட்டி இல்லாமல் நன்கு கிளறி விடவும்.
  • கொஞ்சம் வெதுவெதுப்பான சூடு இருக்கும் போதே சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். இவற்றை ஒரு மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விட வேண்டும்.
  • இந்த நேரத்தில் இந்த உருண்டைகளைப் பொரிப்பதற்குத் தேவையான மாவு தயார் செய்ய வேண்டும். அரிசி மாவு, மைதா,மஞ்சள் தூள் சேர்த்து பஜ்ஜிக்கு மாவு பிசைவது போல் தண்ணீர் ஊற்றி பிசைந்துக்கொள்ள வேண்டும்.
  • இறுதியாக கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானும் உருட்டு வைத்துள்ள உருண்டைகளை மாவில் பிரட்டிப் போட்டு பொரித்து எடுத்தால் போதும். சுவையான கன்னியாகுமரி ஸ்பெஷல் முந்திரி கொத்து ரெடி.

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com