herzindagi
image

Diwali 2025: பட்ஜெட்டிற்கு ஏற்ப தீபாவளிக்கு புத்தாடைகளும், பட்டாசுகளும் வாங்கணுமா? இதைப் பின்பற்றுங்க போதும்!

தீபாவளிக்கு பட்ஜெட் போட்டு செலவழிக்கும் பழக்கம் ஒரு சிலரிடம் இருக்கும். நிச்சயம் இது ஆரோக்கியமான செயல் என்றால் சில விஷயஙகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
Editorial
Updated:- 2025-10-11, 00:00 IST

தீபாவளிக்கு இன்னும் ஒரு வார காலம் உள்ள நிலையில் புத்தாடைகள் வாங்கவும், பட்டாசுகள் வாங்குவதற்காக ஒவ்வொரு கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. டிரெண்டிங்கிற்கு ஏற்றவாறு வாங்க வேண்டும் என்று ஒரு கூட்டம் சுற்றித் திரியும் அதே வேளையில் அலுவலகத்தில் கொடுக்கும் போனஸை வைத்து எப்படி நம்முடைய பட்ஜெட்டில் தீபாவளிக்குத் தேவையான பொருட்களை வாங்கலாம் என்று சிலர் தேடிக் கொண்டிருப்பார்கள். இப்படி தீபாவளி கொண்டாடும் நபர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் தீபாவளிக்கான உங்களது செலவுகளை எப்படி பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என சில ஆலோசனைகள் இங்கே.

மேலும் படிக்க: தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிர்க்க மின்சார ரயில் திட்டம்; எந்தெந்த ஊர்களுக்குத் தெரியுமா?


திட்டமிடுதல்:

தீபாவளிக்கு ஒரு மாத காலத்திற்கு முன்னதாகவே பர்னிச்சர்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள், பட்டாசு கடைகளில் ஆபர்களை வாரி வழங்குகிறார்கள். விலை குறைவு என்பதற்கான அத்துணையையும் வாங்க வேண்டும் என்று நினைப்பது தவறு. மாறாக தீபாவளிக்கு என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்ற திட்டமிடல் அவசியம். முதலில் வீட்டில் எத்தனை நபர்கள் உள்ளனர்? அவர்களுக்கு என்னென்ன பொருட்களெல்லாம் தேவை? என்பது குறித்து ஒரு பட்டியல் தயார் செய்யவும். இந்த பட்டியலில் தேவையில்லாத பொருட்கள் அல்லது வீண் செலவு என தெரிந்தால் முதலில் அதைத் தவிர்த்துக் கொள்ளவும்.

சலுகைகளைக் கவனிக்கவும்:

இன்றைக்கு பெரும்பாலானவர்களிடம் ஷாப்பிங் கார்டு அல்லது கிரெடிட் கார்டு நிச்சயம் இருக்கும். தீபாவளி நேரத்தில் இதுபோன்ற கார்டுகளை சலுகைகள் அதிகம் வழங்குவார்கள். எந்த பொருள்கள் வாங்கினால் கார்டில் எவ்வளவு சலுகைகள் கிடைக்கும் என்பது குறித்து அறிந்துக் கொள்ளுங்கள். பின்னர் அதற்கு ஏற்றார்போல் ஷாப்பிங் செய்வது நல்லது.

மேலும் படிக்க: தீபாவளி விளக்குகளை என்ன செய்யணும் தெரியுமா ? தப்பித் தவறி கூட இதை செய்யாதீங்க


தீபாவளி என்றாலே ஆஃபர்கள் அதிகளவில் கிடைக்கும் என்பது உண்மை தான். அதற்காக தரம் குறைந்த பொருட்களை வாங்கி உங்கள் பணத்தை வீணாக்க வேண்டாம். கூட்ட நெரிசலில் எதையும் நிதானமாக வாங்க முடியாது என்பதால் இதைத் தவிர்ப்பது நல்லது. அதிக கூட்டத்தில் தவறான பொருட்களை வாங்கி பட்ஜெட் பணத்தை வீணாக்க வேண்டாம்.

விடுமுறை நாட்களைத் தவிர்க்கவும்:

பொதுவாக குழந்தைகளுக்கு தீபாவளிக்கு புத்தாடைகள் வாங்க வேண்டும் என்று நினைத்தால் வார இறுதி அல்லது விடுமுறை நாட்களில் தான் பெரும்பாலோனர் வாங்குவார்கள். இந்த நாட்களில் ஷாப்பிங் செய்வது தவறான செயல். ஏனென்றால் அதிக கூட்டம் உள்ள நேரத்தில் பொருட்களை வாங்க முடியாது என்றாலும் பல்வேறு சலுகைகள் இருக்கும். ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம். இந்த பொருள் ரூ.100 என சலுகைகள் வாரி வழங்கும் போது பட்ஜெட் தொகையை விட அதிகமாக செலவாகும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

தீபாவளி திருநாளுக்கு புத்தாடைகள் மட்டுமல்ல பட்டாசுகளை வாங்க வேண்டும் என்று நினைத்தாலும் குழந்தைகளுக்கு எது தேவை? எந்த பட்டாசு அவர்களுக்குப் பாதுகாப்பானது? என்பதைப் பார்த்துவிட்டு வாங்குங்கள். புதிதாக பல பட்டாசுகள் சந்தையில் விற்பனையாகிறது என்பதற்காக அதை வாங்குவதைத் தவிர்க்கவும்.

Image credit - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com