தீபாவளிக்கு இன்னும் ஒரிரு தினங்களே உள்ளது. வீட்டில் உள்ள குழந்தைகள் அனைவரும் புத்தாடைகள் வாங்கவும், பட்டாசுகள் வாங்கவும் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அதே சமயம் வீட்டில் உள்ள பெண்களோ? தீப திருநாளில் குழந்தைகளுக்கு என்ன பலகாரங்கள் செய்துக் கொடுக்கலாம். சுவையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க என்னென்ன செய்ய வேண்டும்? என யோசிப்பார்கள். இந்த நிலையில் உள்ள பெண்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் இந்த கட்டுரையைக் கொஞ்சம் வாசித்து விட்டுப் போங்க.
மேலும் படிக்க: தீபாவளி பலகாரம்: வாயில் பட்டவுடன் கரையும் மைசூர்பாகு செய்யலாம் வாங்க!
தீபாவளி என்றாலே பலரது வீடுகளில் முறுக்கு சுடுவார்கள். இதற்காகவே அனைத்துக் கடைகளிலும் அரை கிலோ முதல் 5 கிலோ என ரெடிமேட் மாவு பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும். கடைகளில் வாங்கும் மாவு எப்போது தயார் செய்தார்கள்? எப்படி தயார் செய்தார்கள்? என்பது தெரியாது. இதுஒருபுறம் இருந்தாலும் ரெடிமேடாக வாங்கி செய்யும் மாவில் நிச்சயம் சுவை இருக்காது. தண்ணீர் ஊற்றி பிசைந்து வைத்திருந்தாலும் சீக்கிரமே வறண்டு போய்விடும். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால், வீட்டிலேயே பக்குவமாக முறுக்கு செய்வதற்கான மாவு செய்யலாம். அதற்கான செய்முறை விளக்கம் இங்கே.
பச்சரிசி - 4 கிலோ
உளுந்தப்பருப்பு - அரை கிலோ
பாசிப்பருப்பு - கால் கிலோ
பொரிகடலை - சிறிதளவு
மேலும் படிக்க: பாரம்பரிய அரிசியில் தீபாவளி பலகாரங்கள் செய்யலாம் வாங்க; எளிய செய்முறை விளக்கம் இங்கே!
இவ்வாறு வீட்டில் அரைத்து வைத்துள்ள மாவை தண்ணீர் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும். கொஞ்சம் எள், உப்பு, மற்றும் வெண்ணெய் சேர்த்து பிசைந்துக் கொண்டு அரை மணி நேரத்திற்கு அப்படியே வைக்கவும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய்யை சூடாக்கி முறுக்கு நாழில் பிழிந்து எடுத்தால் போதும் சுவையான தீபாவளி ஸ்பெஷல் முறுக்கு ரெடி. முறுக்கு கொஞ்சம் காரமாக தேவைப்பட்டால் முறுக்கு மாவு பிசையும் போது கொஞ்சம் மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com