herzindagi
image

காலை உணவிற்கு ஆரோக்கியம் நிறைந்த வரகு உக்காரை; எளிய செய்முறை விளக்கம் இங்கே!

வரகு அரிசி மற்றும் பாசிப்பயறு கொண்டு செய்யப்படும் இனிப்பு பலகாரமான வரகு உக்காரை எப்படி எளிமையாக செய்யும் வழிமுறைகள்
Editorial
Updated:- 2025-10-30, 23:40 IST

வீட்டில் நடைபெறும் ஒவ்வொரு சுப நிகழ்ச்சிகள் முதல் பிறந்த நாள், திருமண நாள் போன்ற அனைத்து விசேச நாட்களிலும் ஏதாவது இனிப்பு வகைகள் செய்வது சாப்பிடும் பழக்கம் அனைவரது வீடுகளிலும் இருக்கும். இனிப்புகளுடன் எந்த வேலையையும் தொடங்கினால் நிச்சயம் சிறப்பாக முடியும் என்ற நம்பிக்கையைக் கொண்டவர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியென்றால் உடலுக்கு ஆற்றலை அளிக்கும் வகையில் ஏதாவது இனிப்பு பலகாரம் செய்ய வேண்டும் என்றால் ஒருமுறையாவது வரகு உக்காரையைச் செய்து சாப்பிடுங்கள். இதுவரை இந்த ரெசிபியை செய்தது இல்லையென்றால் இதோ அதற்கான ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக.

 

 மேலும் படிக்க: அவல் வைத்து ருசியாக வடை செய்யலாம் வாங்க; எளிய செய்முறை விளக்கம் இங்கே!

உடலுக்கு ஆற்றல் அளிக்கும் வரகு உக்காரை:

தேவையான பொருட்கள்:

  • வரகு - 100 கிராம்
  • பாசிப்பருப்பு - 100 கிராம்
  • வெல்லம் - 150 கிராம்
  • நெய் - 50 கிராம்
  • முந்திரி - 10
  • தேங்காய் துருவல் - கால் கப்
  • ஏலக்காய் , சுக்குத்தூள் - போதுமான அளவு

 மேலும் படிக்க: ஆரோக்கியம், சுவை நிறைந்த பாதாம் அல்வா;  ஒரு முறை இப்படி செய்துப் பாருங்கள் !

வரகு உக்காரை செய்முறை:

  • வரகு உக்காரை செய்வதற்கு முதலில், வரகு மற்றும் பாசிப்பயறு இரண்டையும் மிக்ஸியில் போட்டு பொடியாக்கிக் கொள்ளவும்.
  • பின்னர் இவை இரண்டையும் குக்கரில் வேக வைக்கவும். குக்கரில் இல்லையென்றால் வழக்கமாக சமைப்பது போன்று சமைக்கவும். ஆனால் சாதம் மிகவும் குழைவாக இருக்க வேண்டும். குழைந்து இருந்தால் மட்டுமே சுவை அதிகமாக இருக்கும்.
  • இதையடுத்து வெல்லத்தை நன்கு பொடியாக்கிக் கொண்டு வெல்லபாகு காய்ச்சிக் கொள்ளவும்.
  • பின்னர் வேக வைத்துள்ள வரகு அரிசியில் சேர்த்து நன்கு கிளறவும்.
  • இறுதியாக ஏலக்காய் தூள், சுக்குத்தூள் சேர்க்கவும். இறுதியாக தேங்காய் துருவல் சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் போதும். சுவையான வரகு உக்காரை ரெடி.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com