பல நோய்களைத் தீர்க்கும் ப்ரோலிக்கோப் சூப் செய்யும் முறை

வைட்டமின் ஏ, கே, சி, செலினியம், பாஸ்பரஸ் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களை ப்ரோலிக்கோலி கொண்டுள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்குப் பேருதவியாக உள்ளது. அதுவும் குளிர்காலத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ப்ரோலிக்கோலியை சமைத்து சாப்பிடலாம்.  
image

தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களிலும் கூட சில பகுதிகளில் குளிர் வாட்டி வதைக்கும் சூழலில் பல உடல் நல பாதிப்புகளும் ஏற்படுகிறது. இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றால் ஊட்டச்சத்துள்ள காய்கறிகளைக் கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக சளி, இருமல், தொண்டை கரகரப்பு போன்ற பாதிப்புகளைக் குறைப்பதற்கு சூப்கள் செய்து சாப்பிடுவது நல்லது. இந்த சூழலில் பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்ட ப்ரோலிக்கோலி சூப் எப்படி செய்வது? இதில் உள்ள நன்மைகள் என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம்.

உடலுக்கு வலுச்சேர்க்கும் ப்ரோக்கோலி சூப்:

நாள்பட்ட நோய்களைத் தீர்ப்பது முதல் இதய ஆரோக்கியம் சீராக இயங்குவது வரை உதவியாக இருக்கும் ப்ரோக்கோலியைக் கொண்டு சூப் செய்வதற்கு முதலில் என்னென்ன பொருட்கள் தேவை என தெரிந்துக் கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

  • வெண்ணெய் - 1 டீஸ்பூன்
  • ப்ரோக்கோலி - 2
  • பெரிய வெங்காயம் - 2
  • பூண்டு - 15 பல்
  • சின்ன உருளைக்கிழங்கு - 1
  • தண்ணீர் -தேவையான அளவு
  • மிளகு தூள் - சிறிதளவு
  • கொத்தமல்லி இலை - சிறிதளவு
  • உப்பு - சுவைக்கு ஏற்ப

ப்ரோக்கோலி சூப் செய்முறை:

  • ப்ரோக்கோலி சூப் செய்வதற்கு முதலில் ப்ரோக்கோலியை சிறிது சிறிதாக நறுக்கிக்கொண்டு உப்பு மற்றும் மஞ்சள் கலந்த தண்ணீர் சிறிது நேரம் ஊற வைக்கவும். இதையடுத்து தண்ணீரில் நன்கு கழுவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் குக்கரில் வெண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். இதனுடன் உருளைக்கிழங்கை தோல் நீக்கி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  • இதையடுத்து ப்ரோக்கோலி மற்றும் மிளகு தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்துக் கொண்ட பின்னதாக சிறிதளவு தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை சமைக்கவும்.

மேலும் படிக்க :ஆந்திரா ஸ்பெஷல் பூத்தரேக்கலு; வீட்டில் செய்து பாருங்க ரெசிபி இதோ

  • குக்கர் விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு 5 நிமிடங்களுக்குப் பின்னதாக வேக வைத்த ப்ரோக்கோலியை மிக்ஸி ஜாருக்கு மாற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • இறுதியாக ஒரு பவுலில் அரைத்த ப்ரோக்கோலி கலவை மற்றும் மிளகு தூள் சேர்த்து கொதிக்கும் வரை சமைக்க வேண்டும். பின்னர் கொத்தமல்லி இலைகளை மேல் தூவி விட்டால் போதும் சுவையான மற்றும் ஆரோக்கியமான ப்ரோக்கோலி சூப் ரெடி.

ப்ரோக்கோலியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

ப்ரோக்கோலியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, செலினியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது. மேலும் இதில் க்ளுகோசினோலைட்ஸ் இருப்பதால் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் திறன் உள்ளதாக ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதோடு மட்டுமின்றி தைராய்டு, கேன்சர், முடக்கு வாதம் போன்ற நாள்பட்ட பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் ப்ரோக்கோலியை உணவு முறையில் சேர்த்துக் கொள்ளலாம். இன்றைக்கு அனைத்து மார்க்கெட்டிலும் ஈஸியாக கிடைப்பதால் அடிக்கடிக்கூட உணவு முறையில் சேர்த்துக் கொள்வது நல்லது.

Image credit - Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP