herzindagi
image

உடலை எப்போதும் ஆற்றலுடன் வைத்திருக்க பாசிப்பயறு கஞ்சி போதும்!

சருமத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளைச் சரி செய்வது முதல் கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பாசிப்பயறு கஞ்சி பேருதவியாக உள்ளது.
Editorial
Updated:- 2025-11-04, 00:40 IST

இன்றைக்கு மாறி வரும் உணவுப்பழக்க வழக்கங்களால் பெயர் கூட அதிகளவில் பிரசித்தம் இல்லாத நோய்களால் நாம் அவதிப்பட நேரிடுகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக பெரும்பாலான மக்கள் சிறுதானியங்களைக் கொண்டு தயார் செய்யப்படும் உணவுகளை அதிகளவில் தங்களுடைய உணவு முறைகளில் சேர்க்க ஆரம்பித்துவிட்டனர். உடலுக்கு பல வகைகளில் ஆற்றலை அளிப்பதோடு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் பல நோய்களுக்குத் தீர்வு காண முடியும். இந்த வரிசையில் உடலுக்கு ஆற்றலை அளிக்கும் பாசிப்பயறு கஞ்சி எப்படி செய்வது? இதனால் என்னென்ன? ஆரோக்கிய நன்மைகள் உள்ளது? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

மேலும் படிக்க: செரிமானம் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை; வெற்றிலையின் மருத்துவ பயன்கள்

உடலுக்கு ஆற்றலை அளிக்கும் பாசிப்பயறு கஞ்சி:

தேவையான பொருட்கள்:

  • பாசிப்பயறு - 2 கப்
  • வேர்க்கடலை - 1 கப்
  • பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகள்
  • கம்பு, திணை, வரகு போன்ற சிறுதானியங்கள்
  • மேற்கூறிய அனைத்துப் பொருட்களையும் எடுத்துக் கொள்ளவும். குறிப்பாக தானியங்களைக் குறைவாகவும், பயறு வகைகளை அதிகமாகவும் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • தினமும் அல்லது வாரத்திற்கு இரண்டு முறையாவது வீட்டில் அரைத்து வைத்துள்ள மாவை எடுத்துக் கொள்ளவும். இவற்றிற்குப் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து கஞ்சியாக காய்ச்சிப் பருகவும். பாசிப்பயறு மற்றும் சிறுதானியங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது.

 மேலும் படிக்க: காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த உலர் திராட்சை தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

பாசிப்பயறு கஞ்சியின் நன்மைகள்:

  • பாசிப்பயறு கஞ்சியில் சேர்க்கப்படும் சிறுதானியங்கள் மற்றும் நட்ஸ் வகைகளில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளது. இவை உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளைக் குறைக்கவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவியாக உள்ளது.
  • கார்போஹைட்ரேட்டுகளும் அதிகளவில் உள்ளதால், உடலுக்கு தேவையான ஆற்றலை அளித்து நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்புடன் இருப்பதற்கு உதவுகிறது. இதோடு ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.
  • நார்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளதால் உடலில் தேவையில்லாத கொழுப்புகள் சேர்வதைத் தடுத்து உடல் எடையையும் நிர்வகிக்க உதவுகிறது.

 Image source - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com