
உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது பல்வேறு உடல் நல பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். இதனால் தான் உணவு முறையில் கட்டாயம் ஊட்டச்சத்துள்ள உணவுகள் மற்றும் காய்கறிகளைக் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பார்கள். இதோடு பப்பாளி இலைகளையும் வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் உள்ள பப்பெயன் மற்றும் ஆல்கலாய்டுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவியாக உள்ளது. இந்நிலையில் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பப்பாளி இலைகளை உணவு முறையில் சேர்த்துக் கொள்ளலாம். எப்படி சாப்பிடுவது? இதனால் என்னென்ன நன்மைகளைப் பெற முடியும்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
குளிர்காலம் மற்றும் மழைக்காலத்தில் அதிக கொசுக்கள் உற்பத்தியாவதால் டெங்கு காய்ச்சல் அதி தீவிரமாக பரவக்கூடும். இதனால் மனிதர்களுக்கு உடலில் பிளேட்லெட்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பிப்பதோடு உடல் சோர்வையும் சந்திப்பார்கள். இதற்கு மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவதை விட பப்பாளி இலைகளின் சாறை அரைத்துக் குடிக்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் பப்பாளி இலை சாறு பருகி வரும் போது பிளேட்லெட்களின் எண்ணிக்கை அதிகமாகும்.
மேலும் படிக்க: காலையில் ஒரு பூண்டு சாப்பிட்டால் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா? முழு விபரம் இங்கே!
பப்பாளி இலைகளில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருந்தால் பப்பாளி இலைகளை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது செரிமானம் சீராக செயல்படும். மேலும் பப்பாளியில் உள்ள பாப்பைன் என்ற நொதி இருப்பதால் மலச்சிக்கல் மற்றும் அஜீரண கோளாறுகளை சரி செய்வதற்கு உதவியாக உள்ளது.
இன்றைக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் சர்க்கரை நோய் பாதிப்பை அதிகளவில் சந்திக்க நேரிகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த உணவு முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதோடு பப்பாளி இலைகளையும் சாப்பிட வேண்டும். இதில் உள்ள ஊட்டசத்துக்கள் நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்படும் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் கட்டாயம் பப்பாளி இலைகளை அரைத்து வாரத்திற்கு இருமுறையாவது குடிக்க வேண்டும். இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால் செரிமான பிரச்சனையை சரிசெய்கிறது. பசி உணர்வை அதிகளவில் ஏற்படுத்தாது.
மேலும் படிக்க: Kiwi Fruit Benefits in Tamil: காலை நேரத்தில் கிவி பழங்களை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்
இதோடு மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய வலியைக் கட்டுப்படுத்தவும், சருமத்தில் உள்ள பிரச்சனைகளை சரி செய்யும் பப்பாளி இலை சாறு உதவியாக உள்ளது.
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com