
முகத்தைப் பொலிவுடன் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்கள், அதற்காக எத்தனையோ? மெனக்கெடுகளை சந்திப்பார்கள். அழகு நிலையங்களுக்குச் செல்வது முதல் வீட்டில் உள்ள மஞ்சள், கடலை மாவு, பாசிப்பயறு போன்றவற்றை வைத்து எப்படியாவது முகத்தைப் பொலிவாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் முகத்தைப் பொலிவாக்க கேரட் மிகவும் உதவியாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம் கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ, கரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் சருமத்தை எப்போதும் பொலிவுடன் வைத்திருக்க உதவியாக உள்ளது. இந்த நேரத்தில் எப்படி கேரட்டை பல வழிகளில் சருமத்தைப் பொலிவாக்க பயன்படுத்தலாம்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
இன்றைய சூழலில் நாள் முழுவதும் மொபைல் பார்ப்பது முதல் அலுவலக பணிக்காக லேப்டாக்களை உபயோகிக்கும் பழக்கம் அதிகமாவிட்டது. தொழில்நுட்ப சாதனங்களில் வெப்பம் சருமத்தைப் பொலிவிழக்க செய்யும். கொங்சம் மங்கிக்கூட காணப்படும் இவற்றை சரி செய்ய கேரட் பயன்படுத்தலாம். கேரட்டுடன் சிறிதளவு பால் மற்றும் கடலை மாவு போன்றவற்றை சேர்த்து பேஸ் பேக் தயார் செய்துக் கொள்ளவும். இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்து 15 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிடவும். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் போதும் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மங்கிய முகத்தை மீண்டும் பொலிவுடன் வைத்திருப்பதற்கு உதவியாக இருக்கும்.
மேலும் படிக்க: குளிர்ந்த நீரில் குளிப்பதன் மூலம் உங்கள் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
அடுத்ததாக சருமத்தின் அழகைக் கெடுப்பது கருவளையங்கள். இரவு நீண்ட நேரம் முழித்து இருப்பதாலும், அலைச்சல் போன்றவற்றால் கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்பட்டு விடும். இவற்றிற்கு கேரட் துருவல் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்னர் இதை வடிகட்டி கண்களைச் சுற்றி அப்ளை செய்து 10 நிமிடங்களுக்குப் பின்னதாக முகத்தை அப்ளை செய்யவும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தைப் பொலிவாக்க உதவுகிறது.
மேலும் படிக்க: Hair care tips: ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு நீங்கள் பின்பற்ற வேண்டிய சிறந்த குறிப்புகள்
கேரட்டை பாலில் நன்கு வேக வைத்தால் ஒரு க்ரீம் போல கிடைக்கும். இதை முகம் , காது மற்றும் கழுத்துப் பகுதிகளில் மாய்ஸ்ச்சரைாக அப்ளை செய்யவும். இது குளிர்காலத்தில் ஏற்படும் வறண்ட சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.
Image source- Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com