குளிர்காலத்தில் நோய் நொடியில்லாமல் வாழ; கேரட் இஞ்சி சூப் செய்வது எப்படி?

அடிக்கடி பசியை தூண்ட மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் கேரட் இஞ்சி சூப் செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
image

குளிர் காலம் துவங்கிவிட்ட நிலையில் நம்மில் பலருக்கும் அடிக்கடி ஜலதோஷம், காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படும். பொதுவாகவே இந்த குளிர் காலத்தில் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். நம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த ஆரோக்யமான உணவுகளை சாப்பிடுவது முக்கியம். அதே போல இந்த குளிர் காலத்தில் அதிகமாக பசி எடுக்காத. அந்த வரிசையில் அடிக்கடி பசியை தூண்ட மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் கேரட் இஞ்சி சூப் செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

கேரட் இஞ்சி சூப் செய்ய தேவையான பொருட்கள்:

  • கேரட் 2
  • இஞ்சி 2 துண்டு
  • 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  • 1 பெரிய வெங்காயம்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு மிளகுத்தூள்
  • 6 பல் பூண்டு
  • 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • கொத்தமல்லி இலை - சிறிதளவு

கேரட் இஞ்சி சூப் செய்முறை:


கேரட் இஞ்சி சூப் செய்ய முதலில் அடுப்பில் ஒரு சிறிய பாத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்த பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், உப்பு மற்றும் சிறிதளவு மிளகுத் தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

samayam-tamil-89421811 (1)

பிறகு நாம் பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் நறுக்கி வைத்திருக்கும் கேரட்டை இந்த கடாயில் சேருங்கள். இப்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து தண்ணீர் எதுவும் சேர்க்காமல் 5 நிமிடங்கள் வரை நன்றாக வேகவிடுங்கள். இதனை தொடர்ந்து இதில் நறுக்கி வைத்த இஞ்சி துண்டுகளைச் சேர்த்து கொதிக்கவிடுங்கள். இப்போது சிறிதளவு சூப்பிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதனுடன் எலுமிச்சை சாறும் சேர்த்து குறைந்தது 15 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

மேலும் படிக்க: மழைக்கு இதமாக ஈரோடு ஸ்பெஷல் நல்லாம்பட்டி சிக்கன் கிரேவி ட்ரை பண்ணலாமா? உங்களுக்கான ரெசிபி டிப்ஸ்

இந்த சூப் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு சில நிமிடங்கள் ஆறவிடுங்கள். ஆறியதும் இதை மிக்சியில் போட்டு நன்கு அரைத்துப் பிறகு வடிகட்டி குடித்தால் கேரட் இஞ்சி சூப் ரெடி. இதற்கு மேல் கொத்தமல்லி இலைகளும் சிறிது மிளகுத் தூளும் தூவிக் கொடுத்தால் சுவையாக இருக்கும். குளிருக்கு இதமாக வேண்டும் என்றால் 2 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து லேசாக சூடானதும் வெதுவெதுப்பாக இந்த கேரட் இஞ்சி சூப் குடிக்கலாம்.

Image source: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP