herzindagi
image

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தேன் நெல்லிக்காயை சுலபமாக செய்யும் முறை!

தேனுடன் நெல்லிக்காயைக் கலந்து சாப்பிடும் போது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு செரிமான மேம்பாடு மற்றும் சருமத்தை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
Editorial
Updated:- 2025-11-06, 00:33 IST


நம்மில் பலர் உடல் நலத்தில் எவ்வித அக்கறையும் காட்டுவதில்லை. உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக விலையுயர்ந்த சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. மாறாக குறைந்த விலையில் மிகவும் எளிமையாக கிடைக்கும் சில பொருட்களை வைத்து உடலுக்க ஆற்றல் சேர்க்கும் ரெசிபிகளை செய்ய முடியும். அவற்றில் ஒன்று தான் தேன் நெல்லிக்காய்.

மேலும் படிக்க: அழகுக்கு அழகு சேர்க்கும் இயற்கை பொருட்கள்; உங்கள் வீட்டு சமையலறையிலேயே இவை இருக்கின்றன!

தேன் நெல்லிக்காய் செய்யும் முறை:

தேவையான பொருட்கள்:

  • நெல்லிக்காய் - அரை கிலோ
  • தேன் - அரை லிட்டர்
  • கண்ணாடி ஜாடி - 1

மேலும் படிக்க: சைவ உணவுப் பிரியர்களா நீங்கள்? இரும்புச் சத்து நிறைந்த இந்த உணவுகள் உங்களுக்குத் தான்!

  • உடலுக்கு ஆற்றலை அளிக்கும் தேன் நெல்லிக்காய் செய்வதற்கு முதலில் நெல்லிக்காயை நன்கு கழுவி இட்லி பானையில் வேக வைக்கவும்.
  • ஓரளவிற்கு வெந்ததும் நெல்லிக்காயின் விதைகளை நீக்கி விட்டு நீளவாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் சுத்தமான தேனை கண்ணாடி பாட்டிலில் சேர்த்து நறுக்கி வைத்துள்ள நெல்லிக்காயுடன் சேர்த்து நன்கு குலுக்கிக் கொள்ளவும். நெல்லிக்காய் முழுவதும் மூழ்கும் படி தேனை ஊற்றிக் கொள்ளவும். கண்ணாடி பாட்டிலை நன்கு குலுக்கிய பின்னதாக ஒரு வார காலத்திற்கு பாட்டிலுடன் வெயிலில் வைத்திருக்கவும்.


தேன் நெல்லிக்காயின் ஆரோக்கிய நன்மைகள்:

நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் மற்றும் தேனில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. உடலில் உள்ள இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு உடலில் தேவையில்லாத கெட்ட கொழுப்புகள் சேர்வதைத் தடுக்கிறது.

 

Image source - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com