herzindagi
image

Bangalore Special Chutney: காரசாரமான பெங்களூர் ஸ்பெஷல் தக்காளி கடலை சட்னி செய்முறை!

இட்லி, தோசை போன்றவற்றிற்கு வழக்கமாக செய்யும் சட்னிக்கு மாற்றாக தக்காளி மற்றும் நிலக்கடலையை வைத்து பெங்களூர் ஸ்டைலில் சுவையான சட்னி செய்யலாம்.
Editorial
Updated:- 2025-12-16, 15:56 IST

நம்மில் பலரது வீடுகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் இட்லி, தோசைக்கு பிரதான இடம் உண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடக்கூடிய இந்த ரெசிபிக்கு தக்காளி சட்னி, வெங்காய சட்னி,தேங்காய் சட்னி, சாம்பார், இட்லி பொடி போன்ற ஏதாவது ஒன்றை செய்து சாப்பிடுவோம். தினமும் இந்த சட்னிகளில் ஏதாவது ஒன்று செய்து சாப்பிடுவதால் சில நேரங்களில் சளிப்பாகிவிடும். இதற்கு மாற்றாக என்ன செய்யலாம்? என்ற யோசனையில் உள்ளீர்களா? அப்படியென்றால் இதோ உங்களுக்கான ரெசிபி இங்கே..

பெங்களூர் ஸ்பெஷல் தக்காளி கடலை சட்னி:

கர்நாடக மாநிலத்திற்கே உரித்தான காரத்துடன் சுவையான தக்காளி நிலக்கடலை சட்னி செய்வதற்குத் தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறை விளக்கம்.

மேலும் படிக்க: வெறும் 30 நிமிடங்களில் குழந்தைகள் விரும்பும் பனீர் கட்லெட் செய்முறை!


தேவையான பொருட்கள்:

  • தக்காளி - அரை கிலோ
  • வேர்க்கடலை -ஒரு கப்
  • பச்சை மிளகாய் - 5
  • பூண்டு- 10
  • புளிக்கரைசல் - 1 கப்
  • உப்பு - சிறிதளவு
  • எண்ணெய் - தேவையான அளவு
  • வெல்லம் - சிறிதளவு
  • கடுகு - 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - தாளிப்பதற்கு ஏற்ப
  • பெருங்காயம் - சிறிதளவு
  • மிளகாய் வத்தல் - 3

மேலும் படிக்க: சேப்பங்கிழங்கு கிழங்கு இலைகளை உணவில் சேர்ப்பதால பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்

  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். கொஞ்சம் வதங்கியவுடன் இதனுடன் தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  • புளிக்கரைசலைச் சேர்த்து ஒரு 5 நிமிடங்களுக்குக் கொதிக்க வைக்கவும்.
  • பின்னர் இந்த கலவையுடன் சிறிதளவு நிலக்கடலை பருப்பைச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். சுவைக்காக சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து அரைப்பது நல்லது.

Image source - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com