herzindagi
image

சைவ உணவுப் பிரியர்களா நீங்கள்? இரும்புச் சத்து நிறைந்த இந்த உணவுகள் உங்களுக்குத் தான்!

இரும்புச் சத்து நிறைந்த சைவ உணவுகளின் பட்டியல் இந்தக் தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இவை உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும்.
Editorial
Updated:- 2025-11-05, 13:05 IST

உடலுக்கு தேவையான மிக முக்கியமான தாதுக்களில் இரும்புச் சத்தும் ஒன்று. இது இரத்த சிவப்பணுக்கள் உருவாவதற்கும், உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்ஸிஜனை எடுத்து செல்வதற்கும் உதவுகிறது. இரும்புச்சத்து குறைபாடு, சோர்வு, பலவீனம் மற்றும் இரத்த சோகைக்கு வழிவகுக்கும். 

மேலும் படிக்க: இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும் வெந்தய தண்ணீர்; நோட் பண்ணுங்க மக்களே

 

பொதுவாக, அசைவ உணவுகளில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதாக பலர் நினைக்கின்றனர். எனினும், சைவ உணவுப் பிரியர்களுக்கும் அதிக இரும்புச் சத்து அளிக்கும் பல உணவுகள் உள்ளன. அவற்றில் சில முக்கிய உணவுகளை இங்கே காணலாம்.

 

பருப்பு வகைகள்:

 

பருப்பு வகைகள், இரும்புச் சத்துக்கான மிகச் சிறந்த தாவர அடிப்படையிலான ஒரு களஞ்சியம் என்று கூறலாம். ஒரு கப் சமைத்த பருப்பில் சுமார் 6.50 மி.கி இரும்புச் சத்து உள்ளது. இது புரதம் மற்றும் நார்ச்சத்துகளையும் ஏராளமாக வழங்குகிறது. தினமும் சாம்பார், பருப்பு கூட்டு, கிச்சடி போன்ற உணவுகளில் பருப்பை சேர்த்துக் கொள்வது இரும்புச் சத்து தேவையை பூர்த்தி செய்ய உதவும்.

 

டோஃபு:

 

சோயாபீன்ஸ் மூலம் தயாரிக்கப்படும் டோஃபு, இரும்புச் சத்துக்கான ஒரு நல்ல உணவாகும். அரை கப் டோஃபுவில் சுமார் 6.65 மி.கி இரும்புச் சத்து உள்ளது. இதை வறுவல், கறி வகைகள் மற்றும் கிரில் உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம். இது புரதச்சத்தும் நிறைந்தது.

 

பூசணி விதைகள்:

 

பூசணி விதைகளிலும் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. ஒரு கப் உலர்ந்த பூசணி விதைகளில் சுமார் 11.4 மி.கி இரும்புச்சத்து உள்ளது. இவை ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களையும் கொண்டுள்ளன. இவற்றை சிற்றுண்டியாகவோ, சாலட்களில் தூவியோ சாப்பிடலாம்.

Pumpkin seeds

மேலும் படிக்க: குடல் இயக்கத்தை சீராக்கும்; நோய்த் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும்; இந்த மழைக்காலத்தில் நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

 

எள்:

 

எள் இரும்புச் சத்து நிறைந்த ஒரு சிறிய விதை. ஒரு கப் உலர்ந்த எள்ளில் சுமார் 21 மி.கி இரும்புச் சத்து உள்ளது. இதை சாலட்கள், லட்டுக்கள் மற்றும் சட்னி வகைகளில் சேர்த்துக் கொள்ளலாம். எள் நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

 

முந்திரி:

 

முந்திரி சுவை நிறைந்தது மட்டுமல்ல, இரும்புச் சத்தும் இதில் அதிகம் உள்ளது. ஒரு கப் முழு முந்திரியில் சுமார் 7.8 மி.கி இரும்புச் சத்து உள்ளது. இவற்றை சிற்றுண்டியாகவோ அல்லது உணவின் ஒரு பகுதியாகவோ சேர்த்துக் கொள்ளலாம். சாஸ் மற்றும் கிரேவி வகைகளில் முந்திரியை அரைத்து சேர்ப்பதும் ஒரு சிறந்த வழி.

 

கீரை:

 

கீரை வகைகளில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. இவை உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களையும் வழங்குகின்றன. ஒரு கப் சமைத்த கீரையில் கணிசமான அளவு இரும்புச் சத்து உள்ளது. கீரையை சூப், சாலட் அல்லது பொரியல் போன்ற வடிவங்களில் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரும்புச் சத்து குறைபாட்டை தவிர்க்கலாம்.

Spinach

 

இவற்றை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், இரும்புச்சத்து குறைபாட்டை தடுத்து ஆரோக்கியமாக இருக்க முடியும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com